இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

'பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை' நிகழ்ச்சித்திட்டத்தின் முதலாவது கட்டம் கொழும்பு பொது நூலகத்தில்

திகதி : 2022-02-17

இலங்கைப் பாராளுமன்றம் தொடர்பான சரியான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பொது மற்றும் பாடசாலை நூலகங்களை உள்ளடக்கும் வகையில் 'பாராளுமன்றத்திலிருந்து நூலகம் வரை' நிகழ்ச்சித்திட்டம் சமீபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் அதன் முதற்கட்டமாக கொழும்பு பொது நூலகத்திற்கு பல நூல் தொகுப்புகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பொது நூலகத்தின் நூலகர் திருமதி. வருணி கங்கபட ஆராச்சி, பிரதி நூலகர் திருமதி. சிந்தா அயிலப்பெரும, நூலகத்தின் ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்கள அதிகாரிகள் குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்வு சட்டவாக்க சேவைகள் திணைக்கள பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச். ஈ ஜனகாந்த சில்வா அவர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

நாட்டின் பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர நிலையமாக கருதப்படும் இலங்கைப் பாராளுமன்றத்தின் வரலாற்றுப் பெறுமதி, சட்டமாக்கல் செயற்பாடுகள், குழு முறைமை போன்றன தொடர்பானதும் வரலாற்று காலங்களிலிருந்து சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளை எதிர்கொண்டு நமது பாராளுமன்றம் கடந்துவந்த நீண்ட பாதை அடங்கிய நூல்கள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை நாடளாவிய ரீதியில் உள்ள நூலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு விநியோகிக்கும் நிகழ்வே இதுவாகும். இதன்மூலம் பாராளுமன்றம் பொது மக்களுடன் நெருங்கிச் செயற்படுவதற்கான வழியாகவும் இது அமைகின்றது.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களின் ஆலோசனையின்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வில் நீங்கள்/ உங்களது நூலகம் ஒரு பங்குதாரராக செயற்பட தயாராக இருப்பின் கீழேயுள்ள தொலைபேசி இலக்கங்களை அணுகுவதன் மூலம் இலங்கைப் பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தை தொடர்பு கொள்ளலாம்.

 

தொடர்பாடல் திணைக்களம் - பொது வெளிக்களப் பிரிவு – 011-2777318
ஜெய பிரகாஷ் (பொதுச்சேவை ஒருங்கிணைப்பாளர்) – 071-5352672

 

12

34

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom