2022ஆம் வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் |
திகதி : | 2022-02-15 |
மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (14) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார்.
கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதுடன், திருத்தங்களுடன் இது நிறைவேற்றப்பட்டிருந்தது.
இதன் ஊடாக 1981ஆம் ஆண்டு 66ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சட்டம் எனப் பெயர் மாற்றம் பெறுவது உள்ளிட்ட திருத்தங்களுக்கு உள்ளாகிறது.
இதற்கமைய 2022ஆம் ஆண்டு 01ஆம் இலக்க மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப் பொறுப்பு (திருத்தச்) சட்டம் நேற்று (14) முதல் நடைமுறைக்கு வருகிறது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







