இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பு பிரதி சபாநாயகர் தலைமையில் வெளியிடப்பட்டது

திகதி : 2022-02-08

பாராளுமன்ற சார சங்ஹிதா புலமை இலக்கிய நூலின் இரண்டாவது பதிப்பு கௌரவ பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இன்று (08) பாராளுமன்றத்தில் வெளியிட்டப்பட்டது.

இந்நூலின் முதலாவது பிரதியை பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயகவிடமிருந்து பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பெற்றுக்கொண்டார். அத்துடன், சபை முதல்வரும், கல்வி அமைச்சருமான தினேஷ் குணவர்தன மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும ஆகியோருக்கும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் பாராளுமன்ற சார சங்ஹிதா புலமை இலக்கிய நூலின் பிரதிகளைக் கையளித்தார்.

பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் பல்வேறு பிரிவுகளில் கடந்த வருடம் பாராளுமன்ற ‘சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூலுக்கான கட்டுரைகள் கோரப்பட்டன.

சட்டவாக்க செயற்பாடுகள், நிலைபேறான அபிவிருத்தி, தேர்தல் முறைமை மற்றும் அதன் திருத்தங்கள், பாராளுமன்ற அறிக்கையிடலும் வெகுஜன ஊடகமும், பொதுமக்கள் தொடர்பு மற்றும் இலங்கை பெண்கள் அரசியலில் புதிய போக்கு ஆகிய பல்வேறு தலைப்புகளில் கல்வித்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களின் கட்டுரைகள் இந்நூலில் உள்ளடங்கப்பட்டுள்ளன. இதன் மீளாய்வுக் குழுவில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ரத்னசிறி அரங்கல, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா ஹப்புஆராச்சி, களனி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஜீ. யோகராஜா, கொழும்பு பல்கலைக்கழக ஸ்ரீ பாளி கல்லூரியின் கலாநிதி டியூடர் வீரசிங்க மற்றும் களனி பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க ஆகியோர் காணப்படுகின்றனர்.

இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பதிப்பான ‘பாராளுமன்ற சார சங்ஹிதா’ புலமை இலக்கிய நூல் நாட்டின் நூலகங்கள் மற்றும் தேவையானவர்களுக்கு வழங்கிவைக்கப்படவுள்ளது. மேலும், பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களத்தை தொடர்புகொள்வதன் மூலம் தேவையானவர்கள் இந்த நூலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அத்துடன், பாராளுமன்ற சார சங்ஹிதா ஆய்வு புலமை இலக்கிய நூலின் மூன்றாவது பதிப்புக்கான ஆக்கங்கள் கோரல் குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை சட்டவாக்க சேவைகள் பணிப்பாளரும், தொடர்பாடல் திணைக்கள பதில் பணிப்பாளருமான எச்.ஈ.ஜனகாந்த சில்வா அவர்கள் வெளியிட்டார். இதற்கமைய இன்று 08ஆம் திகதி முதல் எதிர்வரும் ஏப்ரல் 24ஆம் திகதி வரை “உலகமயமாக்கல் மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான (Antiglobalization) போக்குகளின் மத்தியில் பாராளுமன்ற முறைமைகள்  என்ற பிரதான தொனிப்பொருளின் கீழ், பதினொரு உப தலைப்புக்களில் ஆக்கங்கள் கோரப்படுகின்றன.

இன்றைய நிகழ்வில் பல்கலைக்கழகத் துறையைச்சார்ந்த பிரதிநிதிகள், ஏனைய துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், பாராளுமன்ற திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

 

12

34

56

78

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom