2019 ஜனவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-01-24 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
எட்டாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடருக்கான அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் முதலாவது அறிக்கையை (2017.07.01 முதல் 2017.09.30 வரை) அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரவீந்திர சமரவீர
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ - ஏழு மனுக்கள்
(iv) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட - ஏழு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
பொலிஸ் அதிகாரிகளுக்கான போக்குவரத்து கொடுப்பனவு
மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்ற சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
“சிரச” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட தனிப்பட்ட கலந்துரையாடல்
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
பின்வருமாறு முப்பத்தியொரு (31) அமைச்சுக்களின் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் நியமிக்கப்படுமாக
1. பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3. தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4. சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5. புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6. நிதி மற்றும் வெகுசன ஊடகம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7. அரசாங்க தொழில்முயற்சிகள், மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8. நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர் கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9. வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10. சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11. மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12. உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13. கைத்தொழில், வாணிப அலுவல்கள், நீண்டகாலமாக இடம்பெயர்ந்த நபர்களின் மீள்குடியேற்றம் மற்றும் கூட்டுறவுத்துறை அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14. மாநகரங்கள் மற்றும் மேற்கு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15. பெருந்தோட்ட கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16. கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17. நெடுஞ்சாலைகள், வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18. பொது நிருவாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19. காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20. வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21. போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22. மலைநாட்டுப் புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர் வலய அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24. நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
25. கல்வி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
26. தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
27. துறைமுகங்கள், கப்பற்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
28. தொலைத்தொடர்புகள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் விளையாட்டுத்துறை பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
29. தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
30. ஆரம்ப கைத்தொழில்கள் மற்றும் சமூகவலுவூட்டல் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
31. அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தகம் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
112 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளை ஏற்பாடுகளின் பிரகாரம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவும், அமைச்சரவையின் உரிய விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரவை அமைச்சர் அதன் தவிசாளராகவும், அதன் இராஜாங்க அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் உட்பட தெரிவுக் குழுவினால் நியமிக்கப்படும் வேறு ஐந்து (05) பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
ஒவ்வொரு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (03) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழு
121(1) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், 2019 சனவரி 22 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டவாறு, அரசாங்க நிதி பற்றிய குழுவின் தவிசாளர் எதிர்த்தரப்பு அங்கத்துவ உறுப்பினர்களிலிருந்து அக் குழுவினாலேயே தெரிவுசெய்யப்படுதல் வேண்டும்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படை சம்பளமாக ரூபா. 1000/-” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1646 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






