2019 ஜனவரி 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-01-23 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் ─
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVII ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும்; மற்றும்
• 2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் II, III மற்றும் IV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் III ஆம் பகுதியையும், எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதியையும், பத்தாவது தொகுதியின் XXII, XXIII, XXIV, XXVII, XXVIII, மற்றும் XXIX ஆம் பகுதிகள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 1981 ஆம் ஆண்டின் 57 ஆம் இலக்க கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ கட்டளைச் சட்டத்தின் 12(1) ஆம் பிரிவின் கீழ் அமைச்சரவை அனுமதியுடன் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மே 25 ஆம் திகதிய 2072/58 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட இலங்கை கரையோரப் பிராந்தியம் மற்றும் கரையோர மூலவள முகாமைத்துவ திட்டம் - 2018
(iii) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான கட்டிடத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்களுக்குப் பதிலாக கௌரவ சி. சிறீதரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்களுக்குப் பதிலாக கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டிலான் பெரேரா
(ii) கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
(iii) கௌரவ எஸ். பிரேமரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
விவசாயத் துறையை அழித்துவரும் ‘சேனா’ படைப்புழு தொடர்பாக 2019.01.22 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில், கிராமியப் பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
கடன் இணக்கம் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“மன்னார் மற்றும் பல்லிமுனையில் வாழும் மீன்பிடி சமூகத்தின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1912 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 24 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






