2019 ஜனவரி 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2019-01-11 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘B’ : பொது மனுக்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘D’ : பின்வரிசைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘E’ : சட்டவாக்க நிலையியற் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் பாலிமர் அறிவியல் துறையொன்றை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2018 ஒக்டோபர் 01 ஆம் திகதிய 2091/06 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(ii) 2016/17 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ மஹிந்த ராஜபக்ஷ
அரசதுறை நிறுவனங்களில் அரசியல் பழிவாங்கல்
மேற்சொன்ன வினாவிற்கு பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை மற்றும் மாகாண சபைத் தேர்தல்
பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பின்வரும் பிரேரணைகளை சபை ஏற்றுக் கொண்டது-
(i) சட்டவாக்க நிலையியற் குழு
113 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், சட்டவாக்க நிலையியற் குழுவானது பிரதி சபாநாயகரைத் தவிசாளராகவும், குழுக்களின் பிரதித் தவிசாளர் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் பதின்நான்கு (14) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(ii) பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு
115 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகள் மற்றும் 2019 சனவரி 8 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணை என்பனவற்றினால் தடைபெறாமல், 2019 சனவரி 10 ஆம் திகதி தெரிவுக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம், பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவானது சபாநாயகரைத் தவிசாளராகவும் பிரதிச் சபாநாயகர், குழுக்களின் பிரதித் தவிசாளர், பாராளுமன்றச் சபை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் மற்றும் தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் மேலும் பதினேழு (17) உறுப்பினர்களையும் கொண்டிருக்குமாக
(iii) பொது மனுக்கள் பற்றிய குழு
122 ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பொது மனுக்கள் பற்றிய குழுவானது தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் பத்தொன்பது (19) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
(iv) பின்வரிசைக் குழு
126(2) ஆம் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினால் தடைபெறாமல், பின்வரிசைக் குழுவானது அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான், எதிர்க்கட்சியின் முதற்கோலாசான், தெரிவுக் குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் அரசாங்கக் கட்சியின் எட்டு (08) பின்வரிசை உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் எட்டு (08) பின்வரிசை உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் கட்டளை (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)
சபையினால் அங்கீகரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1657 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






