இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜனவரி 10ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-01-10

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பு சபையின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் வருடாந்த அறிக்கை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(v)    2017 ஆம் ஆண்டுக்கான தொழில், தொழிற்சங்க உறவுகள் மற்றும் சப்பிரகமுக அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கிளிநொச்சியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்

மேற்சொன்ன வினாவிற்கு பொது நிருவாக மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

எமது நாடு தற்போது எதிர்கொள்ளும் அரசியல், சமூக மற்றும் பொருளாதார சவால்கள் தொடர்பான அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றொன்றினை  பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி, தொழில் பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் முன்வைத்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல்  சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    ஆளொருவரின் இறப்புக்கான சேதவீடுகளை அறவிடுதல் சட்டமூலம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“வட மாகாணத்தில் சிங்கள மொழி ஆசிரியர்களின் பற்றாக்குறை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom