இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2019 ஜனவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2019-01-09

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  நிலையியற் கட்டளைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘B’ :  சபைக் குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘D’ :  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘E’ :  அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘F’ :  கௌரவ சபாநாயகருடனான கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XV ஆம் பகுதியையும் ;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும், ஆறாவது தொகுதியின் XXIII ஆம் பகுதியையும், எட்டாவது தொகுதியின் VI பகுதியையும்;
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXV மற்றும் XXVII ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும் ஐந்தாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் III, XV, XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும்; மற்றும்
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் II, III மற்றும் IV ஆம் பகுதிகளையும், மூன்றாவது தொகுதியின் II ஆம் பகுதியையும், நான்காவது தொகுதியின் I ஆம் பகுதியையும், பத்தாவது தொகுதியின் XVI, XVII, XVIII, XIX, XX மற்றும் XXI ஆம் பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான தேசிய மிருகக்காட்சிசாலைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான விவசாயத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை

(iii)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களுக்குப் பதிலாக கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களுக்குப் பதிலாக கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

சுயாதீன தொலைக்காட்சி நிறுவன ஊழியர்களின் சஞ்சலம் காரணமாக எழுந்துள்ள நிலைமை தொடர்பாக 2019.01.08 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கௌரவ மங்கள சமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இரசாயன ஆயுதங்கள் சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்)

சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரச ஊடக நிறுவனங்களுக்கான அடக்குமுறை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ திலங்க சுமதிபால அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1836 மணியளவில் பாராளுமன்றமானது 2019 ஜனவரி 10 ஆம் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom