இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 டிசம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-12-18

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  சபை முதல்வர் மற்றும் அரசாங்க முதற்கோலாசான் ஆகியோரின் நியமனம்
‘B’ : எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் எதிர்க்கட்சி முதற்கோலாசான் ஆகியோரின் நியமனம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

(i)    2017 ஆம் ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் ஆண்டறிக்கையையும், 2019 ஆம் ஆண்டிற்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலை நிகழ்ச்சித்திட்டம்
(ii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2018.04.01 முதல் 2018.06.30 வரையிலான 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2018.01.01 முதல் 2017.03.31 வரையிலான 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டிற்கான தேசிய பெறுகை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை
(iv)    இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம் 2018.01.01 முதல் 2018.03.31 வரையிலான 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டு மற்றும் 2018.04.01 முதல் 2018.06.30 வரையிலான 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அறிக்கைகள்


ஒத்திவைப்புப் பிரேரணை

“நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்தல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து,1630 மணியளவில் பாராளுமன்றமானது 2018 டிசம்பர் 19 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom