2018 ஒக்டோபர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-10-26 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளைத் துஷ்பிரயோகம் செய்தல் தொடர்பாக விசாரணை செய்வதற்கான சனாதிபதி புலனாய்வு ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் சம்பந்தமானது
‘B’ : 2018 நவம்பர் 05ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தைச் சுற்றிய பாதுகாப்பு தொடர்பானது
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 153ஏ உறுப்புரைகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான (2018.04.01 - 2018.06.30) கணக்காய்வுச் சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மகாவலி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்தின் செயலாற்று அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான ஓய்வூதியத் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை மற்றும் கணக்குகள்
(v) 2017 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டிற்குரிய கணக்குகளும்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களுக்குப் பதிலாக கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜே.சீ. அலவத்துவல
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
முன்னாள் சனாதிபதி கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பாதுகாப்பு தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல, பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க, அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் பதிலளித்தனர்.
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களை நியமித்தல் தொடர்பானது
சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் கௌரவ பி. ஹரிசன் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) தீவிரப் பொறுப்பு முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(ii) குறைநிரப்பும் தொகை - தலைப்பு 117 - நிகழ்ச்சித்திட்டம் 2 (நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சு)
அதனையடுத்து, 1715 மணியளவில் பாராளுமன்றமானது 2018 நவம்பர் 05ஆந் திகதி திங்கட்கிழமை 1500 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






