2018 ஒக்டோபர் 12ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-10-12 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
(i) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம் 2018 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டின் (2018.01.01 - 2018.03.31) எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை; மற்றும்
(ii) இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ(6) உறுப்புரையின் பிரகாரம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் 2015 - 2018 ஆம் ஆண்டு வரையிலான அறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான சட்ட வரைஞர் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்களுக்குப் பதிலாக கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வஜிர அபேவர்தன - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ நவின் திசாநாயக்க
(iii) கௌரவ புத்திக பத்திறண - ஏழு மனுக்கள்
(iv) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இந்தியாவிற்கு திருகோணமலை எண்ணெய் தாங்கியை கையளித்தல் தொடர்பாக 2018.09.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
விசாரணை ஆணைக்குழுக்கள் (திருத்தச்) சட்டமூலம்
விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றுக்காக ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“மறைந்த கௌரவ மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளினை நினைவு கூறல்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1740 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஒக்டோபர் 25ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






