2018 செப்டெம்பர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-09-20 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஆண்டறிக்கை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் தொல்பொருளியில் ஆய்வுப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ வசந்த அலுவிஹாரே
(ii) கௌரவ அனுர சிட்னி ஜயரத்ன
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
இலங்கை பொலிஸ் பெண் அலுவலர்களுக்கான பதவியுயர்வு
மேற்சொன்ன வினாவிற்கு அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சர் கௌரவ நலின் பண்டார ஜயமஹ அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்
மேற்சொன்ன வினாவிற்கு கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் கீழான இரு அறிவித்தல்கள்
(iii) பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iv) சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி
ஒத்திவைப்புப் பிரேரணை
“பசு மாடுகள் இறக்குமதி கருத்திட்டத்திலுள்ள பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1922 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 21ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






