2018 செப்டெம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-09-18 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
Announcements by the Speaker
‘A’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் சம்பந்தமானது
‘C’ : பாராளுமன்ற கூட்ட நடப்பெண் தொடர்பானது
‘D’ : வாய்மூல விடைக்கான வினாக்கள் தொடர்பானது
‘E’ : பாராளுமன்ற குழுக்களில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘F’ : பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்
பின்வரும் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்கள் -
‘G’ : கமத்தொழில் மற்றும் காணி
‘H’ : நல்லிணக்கம் மற்றும் வடக்கையும் கிழக்கையும் மீளக் கட்டியெழுப்புதல்
‘I’ : சர்வதேச தொடர்புகள்
‘J’ : நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்
‘K’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘L’ : சட்டவாக்க நிலையியற் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘M’ : பின்வரிசைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘N’ : நிலையியற் கட்டளைகள் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்
‘O’ : அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘P’ : பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
‘Q’ : போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்றவுள்ள பிரதயீட்டு உறுப்பினர்
‘R’ : கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்
‘S’ : இளைஞர், விளையாட்டுத்துறை, கலை,மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் VIII ஆம் பகுதியையும்; மற்றும்
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும், மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும், ஒன்பதாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஆண்டறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபையின் ஆண்டறிக்கை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியின் ஆண்டறிக்கை
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் பன்னிரண்டாவது ஆண்டறிக்கை
(ix) 2016 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கையுடன் கணக்கறிக்கை
(x) 2016 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xi) 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xii) 2017 ஆம் ஆண்டுக்கான தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்புக்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii) 2017 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கைத்தொழில் அமைச்சின் ஆண்டிற்கான செயற்திறன் அறிக்கை
(xiv) 2016 ஆம் ஆண்டின் நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xv) 2016 ஆம் ஆண்டின் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvi) 2016 ஆம் ஆண்டின் கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii) 2016 ஆம் ஆண்டின் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு, நீதிமன்ற நிருவாக திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம், உயர் நீதிமன்றப் பதிவாளர் திணைக்களம், சட்ட ஆணைக்குழுத் திணைக்களம், பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம், சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம் மற்றும் கடன் இணக்கசபைத் திணைக்களம் என்பனவற்றின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xviii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க, சட்டங்களினால் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 14 ஆம் பிரிவு மற்றும் 4 ஆம் பிரிவின் (3) ஆம் உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 20 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் கட்டுப்பாட்டு தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஓகஸ்ட் 10 ஆம் திகதிய 2083/37 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ லஸந்த அலகியவன்ன
(ii) கௌரவ எட்வட் குணசேகர
(iii) கௌரவ எஸ். எம். சந்திரசேன
(iv) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ - ஐந்து மனுக்கள்
(vi) கௌரவ சந்தித் சமரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன
ஜனாதிபதியை படுகொலை செய்வதற்கான திட்டம் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) வானூர்தி மூலம் ஏற்றிச் செல்லல் சட்டமூலம்
(ii) குடியியல் வான்செலவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
அதனையடுத்து, 1803 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 19ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






