2018 செப்டெம்பர் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-09-07 |
கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : இலங்கையில் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதி செய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற தெரிகுழுவில் கடமையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2015 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XII ஆம் பகுதியையும் ;
• 2016 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XX, XXI, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும் நான்காவது தொகுதியின் V, VII ஆம் பகுதிகளையும் ஆறாவது தொகுதியின் XIII ஆம் பகுதியையும் ; மற்றும்
• 2017 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் பத்தாவது தொகுதியின் XIV, XV ஆம் பகுதிகளையும்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.07.01 முதல் 2018.08.15 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ii) 2016 ஆம் ஆண்டின் கமத்தொழில் அமைச்சு, கமத்தொழில் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பனவற்றின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கைகள்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
நாட்டில் நிலவும் வறட்சி நிலைமை தொடர்பானது
அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்
112 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும், 2018 யூன் 20 ஆம் திகதி மற்றும் 2018 யூலை 17 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரேரணைகளினாலும் தடைபெறாமல், பாதுகாப்பு பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு மற்றும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஆகியன பதினொரு (11) உறுப்பினர்களைக் கொண்டிருப்பதற்குமான பாராளுமன்றச் சபை முதல்வர் கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 32 முதல் 34 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) அரசியலமைப்பின் கீழ் தீர்மானம்
(ii) மருத்துவம் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
ஒத்திவைப்புப் பிரேரணை
“விழாக்கள் மற்றும் சுற்றுலாக்களை ஒழுங்கு செய்யும் இராஜதந்திரிகளினால் (உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு) பின்பற்றப்பட வேண்டிய விதிமுறைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1822 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 18ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






