இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஆகஸ்ட் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-08-23

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2015 ஆம் நிதி ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொள்கை ஆய்வு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    20132014 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கைகள்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான தாவரவியல் பூங்காக்கள் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் வருடாந்த அறிக்கை

(v)    2017 ஆம் ஆண்டுக்கான எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை
(vi)    2017 ஆம் ஆண்டுக்கான வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(vii)   2016 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(viii)    2012, 20132015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான கடற்றொழில் , நீரியல் வளங்கள் திணைக்களத்தின் செயலாற்றறிக்கைகள்
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை

(x)    2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, குடியியல், வான்செலவுச் சட்டத்தின் பிரிவுகள் 11(1)(ஆ), 17(2) மற்றும் 31(ஈ), (உ),(ஊ), (எ) மற்றும் (ஏ) உடன் சேர்த்து வாசிக்கப்படுவதாகிய 117(2) (ஐ)  ஆம் பிரிவின் கீழ் குடியியல் வான்செலவு காப்பு முகாமை தொடர்பில் போக்குவரத்து மற்றும் வான்சேவைகள் அமைச்சரினால்  ஆக்கப்பட்டு, 2018 ஏப்பிறல் 05 ஆம் திகதிய 2065/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xi)    2011 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் 3(3) ஆம் பிரிவின் கீழ்,  துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீடு தொடர்பாக  நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2018 ஏப்பிறல் 06 ஆம் திகதிய 2065/42 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xii)    2016 ஆம் ஆண்டின் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவரின் அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xiii)    இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44 ஆம் உறுப்புரையுடன் சேர்த்து வாசிக்கப்படும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன்  முகாமைப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தையும்  தொல்பொருளியல்  பட்டப்பின்படிப்பு நிறுவகத்தையும் தாபிக்கும் பொருட்டு  அதிமேதகு ஜனாதிபதி அவர்களாள் ஆக்கப்பட்டு, 1985 திசெம்பர் 24 ஆம் திகதிய 381/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv)        1995 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டத்தினால் இறுதியாகத் திருத்தப்பட்டவாறான 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள்  சட்டத்தின் 24 அ என்னும் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 24 ஆ என்னும் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன்  கம்பஹா விக்கிரமாராச்சி ஆயுள்வேத வித்தியாலயத்தை களனி பல்கலைக்கழகத்துடன்  இணைத்து உயர்கல்வி நிறுவகமொன்றாக  தாபிக்கும் பொருட்டு கல்வி, உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 1995 பெப்புருவரி 23 ஆம் திகதிய 859/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv)        1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் அறிவியல் பட்டப்பின் படிப்பு நிறுவகமொன்றை  தாபிக்கும் பொருட்டு கல்வி, உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 1996 சனவரி 16 ஆம் திகதிய 906/1 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi)        1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன்  தேசிய நூலக, தகவல் விஞ்ஞான நிறுவகமொன்றை  தாபிக்கும் பொருட்டு கல்வி, உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 1998 ஒக்டோபர் 22 ஆம் திகதிய 1050/14 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvii)        1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் தொழிநுட்ப நிறுவகம், மொறட்டுவைப் பல்கலைகழகம் என்ற நிறுவகமொன்றை  தாபிக்கும் பொருட்டு கல்வி, உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2000 மார்ச்சு 03 ஆம் திகதிய 1121/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii)        1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ(1)  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பாடசாலை நிலையமொன்றை  தாபிக்கும் பொருட்டும் 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1)  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடன் 1987 செப்தெம்பர் 14 ஆம் திகதிய 471/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளையை இல்லாதொழித்து  மூன்றாம் நிலைக் கல்வி பயிற்சி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2002 ஆகஸ்ட் 21 ஆம் திகதிய 1250/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளைகள்
(xix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 24அ  ஆம் பிரிவின் கீழ் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கலந்தாலோசனையுடனும் கமத்தொழில்- தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய அறிவியலுக்கான  நிறுவகத்தை கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைக்கும் பொருட்டு உயர்கல்வி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2008 ஒக்டோபர் 10 ஆம் திகதிய 1570/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx)    2016 ஆம் ஆண்டின் பாராளுமன்ற சபைமுதல்வரின் அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில்  அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட  விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xxi)    1979 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க, இலங்கை ஏற்றுமதிச் சட்டத்தின் 14 (1) ஆம் பிரிவின் கீழ் செஸ் வரி தொடர்பில் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 24 ஆம் திகதிய 2081/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ அஜித் மான்னப்பெரும அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி                    
(ii)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா                    
(iii)    கௌரவ சமிந்த விஜேசிறி                     
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணத்தில் நிகழும் வன்முறைகள் தொடர்பானது

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

சந்திரதாஸ நைதுவாவடு மற்றும் நந்தன பாலகே ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான விசாரணை தொடர்பானது

மேற்சொன்ன வினாக்களுக்கு அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய 29 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 66 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தம்) எனும் சட்டமூலம் சபையின் அனுமதியுடன் கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களால் மீளபெறப்பட்டது.

இன்றைய 29 ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 27 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் அரசியலமைப்பின் கீழ் தீர்மானத்துக்கான பிரேரணை சபையின் அனுமதியுடன் பாராளுமன்ற சபை முதல்வர் அவர்களால் மீளபெறப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    மதுவரி (திருத்தச்) சட்டமூலம்
(ii)    அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையச் சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii)    உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் மூன்று கட்டளைகள்


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“சமுர்த்தி பயனாளிகளின் குழந்தைகளுக்கு ஜப்பான் உதவித்தொகை” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1831 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஆகஸ்ட் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom