இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஆகஸ்ட் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-08-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  “மருத்துவம் (திருத்தம்)” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(iii)    20‍16 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை

(iv)    2015 ஆம் ஆண்டுக்கான கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(v)    2016 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vi)    2016 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் ஆங்கில பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்
(viii)    2016 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக தேசிய நூலக, தகவல் விஞ்ஞான நிறுவகத்தின் ஆண்டு அறிக்கை
(ix)    2016 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(x)    2015 ஆம் ஆண்டுக்கான அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் சம்பள முரண்பாடுகள் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ வஜிர அபேவர்தன மற்றும் அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோர் பதிலளித்தனர்.

(ii)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

கோனவில் வீட்டுத்திட்டத்திற்கான கடன்கள் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

(i)    மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சை குளம் நீர்ப்பாசன வாவி வான்கதவு திறக்கப்பட்டதன் காரணமாக விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக 2018.06.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் கௌரவ துமிந்த திசாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.

(ii)    முல்லைதீவு பிரதேசத்திற்கான அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக 2018.07.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i)    குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன் (மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு - ஆதரவாக 95; எதிராக 31)
(ii)    அரசியலமைப்பின் கீழ் பிரேரணை
(iii)    சோ்பெறுமதி வரி (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்


ஒத்திவைப்புப் பிரேரணை

“ஊடகம்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1737 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஆகஸ்ட் 10ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom