இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஆகஸ்ட் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-08-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் வருடாந்த அறிக்கை
(ii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டு அறிக்கை
(iii)    2016 ஆம் ஆண்டுக்கான தேசியப் பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(iv)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை
(v)   2016 ஆம் ஆண்டுக்கான தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vi)    2015/2016 ஆம் ஆண்டுக்கான களுபோவிட்டியான தேயிலைத் தொழிற்சாலை லிமிரெட்டின் ஆண்டறிக்கை
(vii)    2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை

(viii)    2017 ஆம் ஆண்டுக்கான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ix)    2017 ஆம் ஆண்டுக்கான மாத்தளை மாவட்டச் செயலகத்தின் செயற்றிறன் அறிக்கைகளும் ஆண்டுக் கணக்குகளும்
(x)    2017 ஆம் ஆண்டுக்கான பதுளை மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கையும் கணக்குகளும்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது
(ii)    இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும்  மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது
(iii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ பிமல் ரத்நாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது
(iv)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளருக்குப் பதிலாக கௌரவ ஹர்ஷண ராஜகருணா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க                     
(ii)    கௌரவ சனத் நிசாந்த பெரேரா
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பிரதம அமைச்சரிடம் கேட்கப்படும் கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் நான்கு கேள்விகள் கேட்கப்பட்டன:-
(i)    கௌரவ வேலு குமார்
(ii)    கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன்
(iii)    கௌரவ  பிமல் ரத்நாயக்க
(iv)    கௌரவ (கலாநிதி) பந்துல குணவர்தன


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

கிளிநொச்சி விவசாயிகளுக்கு யப்பானிய உதவியின் கீழ் வழங்கப்பட்ட இழுவை இயந்திரங்களுக்கான கடனினை மீள்செலுத்துதல் தொடர்பாக 2018.06.21 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கமத்தொழில்அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i)    இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்
(ii)    தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்


அதனையடுத்து, 1506 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஆகஸ்ட் 09ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom