2018 ஆகஸ்ட் 07ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-08-07 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’, ‘B’ : உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘C’ : “இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம்” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘D’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘E’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆண்ட றிக்கைகள்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பொது மருத்துவமனையின் ஆண்டறிக்கை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டு அறிக்கை
(v) 2017 ஆம் ஆண்டுக்கான புத்தளம் மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றலறிக்கை மற்றும் கணக்குகள் அறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை மற்றும் கணக்கு அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கையும் கணக்கும்
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(ix) 2017 ஆம் ஆண்டுக்கான கிராமியப் பொருளாதாரம் பற்றிய அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(x) 2017 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை
(xii) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.06.01 முதல் 2018.06.30 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(xiii) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 12 ஆம் திகதிய 2066/40 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xiv) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 ஏப்ரல் 24 ஆம் திகதிய 2068/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xv) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் உற்பத்தி வரி தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மே 15 ஆம் திகதிய 2071/16 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xvi) 2016 ஆம் ஆண்டின் பாராளுமன்ற சபைமுதல்வரின் அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
(xvii) 2016 ஆம் ஆண்டின் பாராளுமன்ற அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அலுவலகத்தின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ அஜித் மான்னப்பெரும அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ அஜித் பி. பெரேரா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ லக்கி ஜயவர்தன
(ii) கௌரவ அஜித் பி. பெரேரா - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
(iv) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - மூன்று மனுக்கள்
(v) கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சமுகமளிக்காதிருப்பதற்கு அனுமதிகோரும் பிரேரணைகள்
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறினால் டி மெல் அவர்கள் 2018.07.19 முதல் பாராளுமன்ற அமர்வுகளுக்கு சமுகமளிக்காதிருப்பதற்கு கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்களினால் பிரேரிக்கப்பட்ட பிரேரணைக்கு பாராளுமன்ற அனுமதி வழங்கப்பட்டது.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2006 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, பொருளாதாரச் சேவை விதிப்பனவுச் சட்டத்தினைத் திருத்துவதற்காக
“பொருளாதாரச் சேவை விதிப்பனவு (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை கௌரவ அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குற்றவியல் கருமங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினத்தொன்றிற்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதனையடுத்து, 1835 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஆகஸ்ட் 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






