இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜுலை 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-07-20

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XIX, XX  மற்றும்  XXII ஆம் பகுதிகளையும்;
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXII ஆம் பகுதியையும்  நான்காவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் ஐந்தாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் V ஆம் பகுதியையும்; மற்றும்  
•    2017 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் எட்டாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(ii)    2016 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையின் வருடாந்த அறிக்கை
(iii)    2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய விளையாட்டு நிதியத்தின் வருடாந்த  நிருவாக அறிக்கைகள்

(iv)    2017 ஆம் ஆண்டுக்கான விலைமதிப்புத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை குழுவின் தவிசாளருக்குப் பதிலாக கௌரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

கௌரவ பாலித குமார தெவரப்பெரும

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

நிலத்தடிநீர் வளங்களுக்கு நீர் மானிகளை நிறுவுதல் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் கௌரவ பாலித ரங்கே பண்டார சில்வா அவர்கள் பதிலளித்தார்.


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

காலி கிரிகெட் மைதானத்திலுள்ள சட்டவிரோத நிர்மாணங்களை அகற்றுதல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ அவர்கள் கூற்றொன்றினை முன்வைத்தார்.


தனிப்பட்ட  விளக்கங்கள்

கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் அரசியமைப்புச் சபையின் வழிப்படுத்தும் குழு மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தனிப்பட்ட விளக்கமொன்றினை வழங்கினார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலஞ்சம் (திருத்தச்) சட்டமூலம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உன்னிச்சி கிராம மக்கள் எதிர்நோக்கும் குடிநீர் பிரச்சினை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஆகஸ்ட் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom