2018 ஜுலை 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-07-19 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை மன்றத்தின் ஆண்டறிக்கைகளும் கணக்குகளும்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை துறைமுக அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான நிர்மாணம் பயிற்சியளிப்பு அபிவிருத்திக்கான நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2014 இலங்கை அரச பொறியியற் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை
(v) 2013 ஆம் ஆண்டுக்கான நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(vi) 2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்க தகவல் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(viii) 2017 ஆம் ஆண்டுக்கான சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சின் செயற்பாட்டு அறிக்கை
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(x) 2017 ஆம் ஆண்டுக்கான பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xi) 2017 ஆம் ஆண்டுக்கான சமூக சேவைகள் திணைக்களத்தின் செயற்பாட்டு அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(iii) கௌரவ அசோக்க பிரியந்த
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
முல்லைதீவு மாவட்டத்தில் தொல்பொருள் நடவடிக்கைகள் தொடர்பானது
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு மத்தள விமான நிலையத்தின் உரிமையை மாற்றுதல் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால த சில்வா அவர்கள் பதிலளித்தார்.
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகள் பிடித்தல் தொடர்பாக 2018.06.06 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சர் கௌரவ விஜித் விஜயமுணி சொய்சா அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(52 ஆம் அத்தியாயமான) மதுவரிக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
“மதுவரி (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2015 ஜனாதிபதித் தேர்தலிற்காக சீன கம்பனியொன்று நிதியளித்தமை தொடர்பாக ‘நிவ்யோர்க் டைம்ஸ்’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ துஷார இந்துனில் அமரசேன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1846 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூலை 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






