2018 ஜுலை 18ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-07-18 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்களில் பணியாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘B’ : இணைப்புக் குழுவின் முதலாவது கூட்டம்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும் ;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் XI ஆம் பகுதியையும்; மற்றும்
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஒன்பதாவது தொகுதியின் V ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான குருணாகல் மாவட்டச் செயலகத்தின் செயலணி அறிக்கையும் கணக்குகளும்
(ii) 2012, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான நிர்மாணத்துறை, பொறியியல் சேவைகள், வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முப்பத்தி எட்டாவது வருடாந்த அறிக்கை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்கும்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(vi) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை பிக்கு பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக, உயிர் இரசாயனவியல், மூலக்கூற்று உயிரியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆண்டறிக்கையும் வருடாந்த கணக்கறிக்கையும்
(ix) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(x) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கைகளும் கணக்குகளும்
(xi) 2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய பட்டப்பின்படிப்பு நிறுவனத்தின் ஆண்டறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ லக்கி ஜயவர்தன
(ii) கௌரவ (திருமதி) சுமேதா ஜீ. ஜயசேன
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றல் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
(i) இலங்கையின் புகழ்பெற்ற இசைவல்லுனர், காலஞ்சென்ற பண்டித் வன்னகுவத்தவடுகே டொன் அமரதேவவிற்கு நன்றி செலுத்தும் வகையில் “அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம்” என அழைக்கப்படும் அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையமொன்றைத் தாபித்தலை ஏற்பாடுசெய்வதற்கும்; அதன் குறிக்கோள்களையும் தத்துவங்களையும் குறித்துரைப்பதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்காக
“அமரதேவ அழகியல் மற்றும் ஆராய்ச்சி நிலையம்”
எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.
(ii) இலங்கையின் பெருந்தோட்டப் பிராந்தியத்தில் புதிய கிராமங்களை அபிவிருத்தி செய்வதற்குப் பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை எனவழைக்கப்படவேண்டியதும் அறியப்படுவதுமான அதிகாரசபையொன்றைத் தாபிப்பதற்காகவும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக
“பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை”
எனும் சட்டமூலத்தினை மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்கள் பிரேரித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தம்) - திருத்தங்களுடன்
(ii) காணி (பராதீனப்படுத்தல் மீதான மட்டுப்பாடுகள்) (திருத்தம்)
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்களை நிரந்தர சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1915 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூலை 19ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






