இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜுலை 17ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-07-17

சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான விசேட பணிப் பொறுப்பு அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2017 ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு அமைச்சின் செயல்திறன் அறிக்கை
(iii)   2014 ஆம் ஆண்டுக்கான கடற்றொழில், நீரியல் வளத்துறை திணைக்களத்தின் செயலாற்றறிக்கை
(iv)    2017 ஆம் ஆண்டுக்கான உயர்நீதிமன்றப் பதிவாளர் திணைக்களத்தின் செயலாற்றுகை
(v)    2017 ஆம் ஆண்டுக்கான முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் முன்னேற்ற அறிக்கை

(vi)    2015 ஆம் ஆண்டுக்கான சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
(vii)        2015 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஆண்டறிக்கை
(viii)       2015 ஆம் ஆண்டுக்கான கிழக்குப் பல்கலைக் கழகத்தின் வருடாந்த அறிக்கை
(ix)        2015 ஆம் ஆண்டுக்கான தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கை
(x)        2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக, தேசிய நூலக, தகவல் விஞ்ஞான நிறுவகத்தின் ஆண்டு அறிக்கை
(xi)        2015 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக, மனிதவள மேம்பாட்டு நிறுவகத்தின் ஆண்டறிக்கை மற்றும் வருடாந்த கணக்குகள்
(xii)        2015 ஆம் ஆண்டுக்கான களனிப் பல்கலைக் கழகத்தின் தொல்பொருளியில் ஆய்வு பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiii)        2015 ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப் பின்படிப்பு நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(xiv)        2015 ஆம் ஆண்டுக்கான மானிடவியல் மற்றும் சமூக விஞ்ஞானம் பற்றிய உயர்கல்வி தொடர்பான தேசிய நிலையத்தின் ஆண்டறிக்கை
(xv)        2015 ஆம் ஆண்டுக்கான கொழும்பு பல்கலைக் கழகத்தின் சுதேச வைத்திய நிறுவகத்தின் ஆண்டறிக்கை
(xvi)        2015 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீஜயவர்தனபுர பகல்கலைக்கழக முகாமைத்துவப் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தின் ஆண்டறிக்கை

(xvii)    2018 ஆம் ஆண்டுக்கான அரையாண்டு அரசிறை நிலைமை அறிக்கை

(xviii)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 26 ஆம் பிரிவு மற்றும் 30 ஆம் பிரிவின் கீழ் தகைமைபெற்ற ஆட்களைப் பதிவு செய்தல் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 பெப்ரவரி 05 ஆம் திகதிய 2057/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xix)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 35 ஆம் பிரிவின் (1), (2) மற்றும் (4) ஆம் உட்பிரிவுகளின் கீழ் ஒப்பந்தக்காரர்களைப் பதிவு செய்தல் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூலை 10 ஆம் திகதிய 2079/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்டவாறான, 2018 பெப்ரவரி 05 ஆம் திகதிய 2057/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xx)    2014 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, நிர்மாணத் தொழில் அபிவிருத்திச் சட்டத்தின் 58 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 45(2) ஆம் பிரிவின் கீழ் தொழில்நுட்பக் கணக்காய்வு நடவடிக்கைமுறை மற்றும் கட்டணங்கள் தொடர்பில் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 பெப்ரவரி 05 ஆம் திகதிய 2057/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(xxi)    1985 ஆம் ஆண்டின்  48 ஆம் இலக்க மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டங்கள் மூலம் திருத்தப்பட்டவாறான 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க,  இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்)  சட்டத்தின் 4(3)  ஆம் பிரிவு மற்றும் 14 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்டத்தின் 20 ஆம் பிரின் கீழ்  இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் தொடர்பில்  அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 யூன் 18 ஆம் திகதிய 2076/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஹரின் பர்னாந்து                    
(ii)    கௌரவ காமினி லொக்குகே                    
(iii)    கௌரவ விமலவீர திசாநாயக்க                    
(iv)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ        -     ஆறு மனுக்கள்
(v)    கௌரவ எஸ்.எம். மரிக்கார்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

வேலையில்லா பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) ஹர்ஷ த சில்வா அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

பின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-

(i)    இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகம் - இழப்புக்கான எதிரீடுகள் பற்றிய அலுவலகத்தைத் தாபிப்பதற்கும்; இழப்புக்கான எதிரீடுகளுக்குத் தகவுடைய இன்னலுற்ற ஆட்களை அடையாளம் காண்பதற்கும்; அத்தகைய ஆட்களுக்குத் தனியான மற்றும் கூட்டான இழப்புக்கான எதிரீடுகளை வழங்கும் ஏற்பாட்டிற்கென ஏற்பாட்டைச் செய்வதற்கும்; 1987 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க, ஆட்களுக்கு புனர்வாழ்வளித்தல், ஆதனங்களையும் கைத்தொழில்களையும் புனரமைத்தல் அதிகாரசபைச் சட்டத்தை நீக்குவதற்கும் அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான எல்லாக் கருமங்களுக்கும் ஏற்பாடுசெய்வதற்காக
(ii)    சோ்பெறுமதி வரி (திருத்தம்) - 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, சோ்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(iii)    மருத்துவம் (திருத்தம்) - (105 ஆம் அத்தியாயமான) மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்காக


அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

112 ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் ஏற்பாடுகளினாலும், 2018 யூன் 20 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணையினாலும் தடைபெறாமல் அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள் ஒன்பது (09) உறுப்பினர்களைக் கொண்டிருப்பதற்குமான பாராளுமன்றச் சபை முதல்வர் கெளரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்களின் பிரேரணையை சபை ஏற்றுக்கொண்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

“இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு மற்றும் சிங்கப்பூர் குடியரசு இற்கிடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1928 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூலை 18ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom