2018 ஜூன் 22ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-06-22 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : நிர்வாகத்திற்கான பாராளுமன்ற ஆணையாளர் (ஓம்பட்ஸ்மன்) அவர்களால் அனுப்பப்பட்ட அறிக்கை
‘B’ : அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய குழுவின் நியமனம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டுக்கான முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயற்பாட்டு அறிக்கையும் கணக்கு அறிக்கையும்
(ii) 2017 ஆம் ஆண்டுக்கான ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் செயல் மதிப்பீட்டு அறிக்கை
(iii) 2017 ஆம் ஆண்டுக்கான சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் வருடாந்த செயல் நிறைவேற்றுகை அறிக்கை
(iv) 2017 ஆம் ஆண்டுக்கான பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயலாற்றல் அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ருவன் விஜேவர்தன
(ii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே
(iii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(iv) கௌரவ பிமல் ரத்நாயக்க
(v) கௌரவ எஸ்.சீ. முத்துகுமாரண
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன
உள்ளூர் கைத்தொழில்களுக்கான வரிச் சலுகையினை இல்லாதொழித்தல்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ (கலாநிதி) விஜயதாஸ ராஜபக்ஷ
தன்னையும் கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ், பா.உ. அவர்களையும் தொடர்புபடுத்தி லங்காதீப பத்திரிகையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பானது
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ ஏ. ஆர். எம். அப்துல் காதர்
(ii) மறைந்த கௌரவ (திருமதி) ரேணுகா ஹேரத்
(iii) மறைந்த கௌரவ (திருமதி) மல்லிகா இறத்வத்த
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“வன விலங்குகள் காரணமாக பயிர்ச்செய்கை மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விமலவீர திசாநாயக்க அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1635 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூலை 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






