இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 ஜூன் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-06-20

கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : இணைப்புக் குழுவை நியமித்தல்
‘B’ : ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைகள்  பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘C’ : சபைக் குழுவில் சேவையாற்றவுள்ள உறுப்பினர்கள்
‘D’ : சட்ட விவகாரம் (ஊழலுக்கெதிரான) மற்றும் ஊடகத்துறை  பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் சேவையாற்ற நியமிக்கப்பட்டுள்ள உறுப்பினர்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2017 ஆம் ஆண்டுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கையும் ஆண்டுக் கணக்குகளும்
(ii)   2017 ஆம் ஆண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை
(iii)  2017 ஆம் ஆண்டுக்கான மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தின் வருடாந்த செயல்நிறைவேற்று மற்றும் கணக்கு அறிக்கை

(iv)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கைக்கான சபையின் வருடாந்த அறிக்கை

(v)    (190 ஆவது அத்தியாயமான) அஞ்சல் அலுவலகக் கட்டளைச் சட்டத்தின் 9, 12, 19, 21, 25, 27, 49, 59, 62, 64, 67, 68, 72, 95, 96 மற்றும் 97 ஆம் பிரிவுகளின் கீழ் தபால் கட்டணம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரின் இணக்கப்பாட்டுடன் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018  யூன் 07 ஆம் திகதிய 2074/32  ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ வடிவேல் சுரேஷ் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ வேலு குமார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா                -       இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ தயாசிறி ஜயசேகர                    
(iii)    கௌரவ விமலவீர திசாநாயக்க                    
(iv)    கௌரவ அஜித் மான்னப்பெரும                    
(v)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ    -       ஒன்பது மனுக்கள்
(vi)    கௌரவ முஜிபுர் ரஹுமான்
(vii)     கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

அரசினால் அல்லது ஓர் அரச முகவராண்மையினால் சொந்தமாக வைத்திருக்கப்பட்ட குறித்தசில கூட்டாட்சி ஆதனங்களைப் பதிவுசெய்வதனையும் கையுதிர்ப்பதனையும் வசதிப்படுத்துவதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்காக

“இருப்பிடக்கூறு சொத்தாண்மை (விசேட ஏற்பாடுகள்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கள்

பின்வருமாறு நாற்பத்தி மூன்று (43) அமைச்சின் ஆலோசனைக் குழுக்கள் பெயர் குறிப்பிட்டு நியமிக்கப்படுமாக,

1.    பாதுகாப்பு பற்றிய  அமைச்சுசார் ஆலோசனைக் குழு
2.    மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பற்றிய  அமைச்சுசார் ஆலோசனைக் குழு
3.    தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
4.    சுற்றுலாத்துறை அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
5.    புத்தசாசன அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
6.    போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
7.    நிதி மற்றும் வெகுசன ஊடக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
8.    விஞ்ஞான, தொழில்நுட்ப, ஆராய்ச்சி, திறன்கள் அபிவிருத்தி, தொழிற்பயிற்சி மற்றும் கண்டி மரபுரிமைகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
9.    நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
10.    அரச தொழில்முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
11.    வெளிநாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
12.    துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
13.    உள்நாட்டலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
14.    சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ  அலுவல்கள்  பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
15.    உள்ளக அலுவல்கள் மற்றும் வடமேல் அபிவிருத்தி பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
16.    கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
17.    மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
18.    கமத்தொழில்  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
19.    பெருந்தோட்டக் கைத்தொழில்  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
20.    மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
21.    நீர்ப்பாசன, நீர் வளங்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
22.    கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
23.    சமூக வலுவூட்டல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
24.    நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
25.    அரச நிருவாக முகாமைத்துவ மற்றும் சட்டமும் ஒழுங்கும் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
26.    உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
27.    வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
28.    பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
29.    மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
30.    காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
31.    மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
32.    நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
33.    கல்வி  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
34.    மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
35.    தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
36.    இளைஞர் அலுவல்கள், கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
37.    தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரசகரும மொழிகள்  பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
38.    தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
39.    சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
40.    மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
41.    அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
42.    வலுவாதார அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் பிரதேச அபிவிருத்தி  அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு
43.    தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு

112 ஆவது பாராளுமன்ற நிலையியற்கட்டளை மூலம் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்ட விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, ஒவ்வோர் அமைச்சுசார் ஆலோசனைக் குழு எட்டு (8) உறுப்பினர்களைக் கொண்டிருக்குமாக.

ஒவ்வொரு ஆலோசனைக் குழுவினதும் கூட்ட நடப்பெண் மூன்று (3) உறுப்பினர்களாக இருத்தல் வேண்டும்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஜெனரால் சோ் ஜோன் கொத்தலாவலை பாதுகாப்புப் பல்கலைக்கழகம் (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம்

சபையால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சில பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இராணுவ மற்றும் பொலிஸ் முகாம்களை அகற்றல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1913 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஜூன் 21ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom