இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 மே 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-05-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : தெரிவுக் குழுவின் கூட்டம்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமையதிபதியின் விசேட அறிக்கையின் பத்தாவது தொகுதியின் III, XI மற்றும் XII பகுதிகள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பத்திரிகைப் பேரவையின் ஆண்டறிக்கையும் கணக்குகள் கூற்றும்
(ii)    2014/2015 மற்றும் 2015/2016 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் (ஜெனரல்) கோப்பரஷன் லிமிட்டெட்டின் வருடாந்த அறிக்கைகள்
(iii)    2012 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனைத் தாபனத்தின் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்
(iv)    2013 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் ஆண்டறிக்கை
(v)    2014 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையத்தின் ஆண்டறிக்கையும் கணக்குக் கூற்றும்
(vi)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கை

(vii)    2017 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பாராளுமன்றத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    கமத்தொழில் மற்றும் காணி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ விஜித ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    சுகாதாரம் மற்றும் மனித சேமநலம், சமூக வலுவூட்டல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ லக்கி ஜயவர்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(iii)    கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ டக்ளஸ் தேவானந்தா

வட மாகாணத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை மற்றும் காடழிப்பு  தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

ஈ.ரீ.ஐ. நிதிக் கம்பனியில் முதலீடு செய்தோர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்

மேற்சொன்ன வினாவிற்கு நிதி இராஜாங்க அமைச்சர் கௌரவ இரான் விக்கிரமரத்ன அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

தேசிய சூழல் சட்டத்தின் கீழ் ஏழு கட்டளைகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“விவசாயிகளிள் விளைபொருட்களை கொள்வனவு செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டம்” தொடர்பாக ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஹேஷான் விதானகே அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1917 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 24ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom