2018 மே 11ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-05-11 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : கௌரவ சபாநாயகருடனான விசேட கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2017 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பெண்கள் மற்றும் பால்நிலை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
யுத்த காலத்தின்போது செயற்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனை தீர்த்தல்
மேற்சொன்ன வினாவிற்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-
(i) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) - (129 ஆம் அத்தியாயமான) கடை, அலுவலக ஊழியர் (ஊழியத்தையும் வேதனத்தையும் ஒழுங்குபடுத்தல்) சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii) மகப்பேற்று நன்மைகள் (திருத்தம்) - (140 ஆம் அத்தியாயமான) மகப்பேற்று நன்மைகள் கட்டளைச்சட்டத்தைத் திருத்துவதற்காக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
குடியியல் வான்செலவு (திருத்தச்) சட்டமூலம்
சபையால் நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1256 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மே 22ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






