2018 ஏப்ரல் 06ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-04-06 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : தவிசாளர் குழாமில் தற்போதுள்ள உறுப்பினர்களுக்கு பதிலாக புது உறுப்பினர்களை நியமித்தல்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரீ. பீ. ஏக்கநாயக்க - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ புத்திக பத்திறண
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அனுதாபப் பிரேரணைகள்
பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-
(i) மறைந்த கௌரவ எஸ். அலவி மெளலானா
(ii) மறைந்த கௌரவ கருப்பையா வேலாயுதம்
(iii) மறைந்த கௌரவ சுரநிமல் ராஜபக்ஷ
(iv) மறைந்த கௌரவ யூ.பீ. விஜேகோன்
சிறப்புரிமைக் கேள்விகள்
கௌரவ பைஸால் காசிம்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தல் தொடர்பானது
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பின்வரும் சட்டமூலங்களை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்-
(i) தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்) - (19 ஆம் அத்தியாயமான) தண்டனைச் சட்டக்கோவையினைத் திருத்துவதற்காக
(ii) குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்) - 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவைச் சட்டத்தைத் திருத்துவதற்காக
அதனையடுத்து, 1734 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஏப்ரல் 19ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






