2018 ஏப்ரல் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-04-05 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2017 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2018.01.22 முதல் 2018.02.28 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான தேசிய நிறுவகத்தின் வருடாந்த அறிக்கை
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் ஆண்டறிக்கை
(v) 2015 ஆம் ஆண்டுக்கான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச் சபையின் வருடாந்த அறிக்கை
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை நீதிபதிகள் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(vii) 2017 ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற சபை முதல்வரின் அலுவலகத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(viii) 2016 ஆம் ஆண்டுக்கான இறப்பர் அபிவிருத்தித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சந்திம கமகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்துமபண்டார - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
பின்வரும் சட்டமூலங்களை பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்-
(i) தேசிய பாதுகாப்பு நிதியம் (திருத்தம்) - 1985 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, தேசிய பாதுகாப்பு நிதியச் சட்டத்தைத் திருத்துவதற்காக
(ii) பிரதேச சபைகள் (திருத்தம்) - 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்காக
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள்
சபையால் அங்கீகரிக்கப்பட்டன.
அதனையடுத்து, 1230 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஏப்ரல் 6ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






