2018 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-03-23 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை
(iii) 2015 ஆம் ஆண்டின் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த அறிக்கை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டறிக்கை
(v) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை
(vii) 2008 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4) ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 மார்ச் 16 ஆம் திகதிய 2062/47 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2017 திசெம்பர் 15 ஆம் திகதிய 2049/59 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட, கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
கௌரவ துமிந்த திசாநாயக்க - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கையிலுள்ள சில நிதி நிறுவனங்களில் காணப்படும் நெருக்கடி தொடர்பாக 2018.01.23 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-
(i) பிரதம நீதியரசர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கான சம்பளம் மற்றும் படிகளில் திருத்தம் மேற்கொள்ளல் தொடர்பான அரசியலமைப்பின் கீழான தீர்மானம்
(ii) தீவிரப் பொறுப்பு முகாமை சட்டமூலம் - திருத்தங்களுடன்
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழான ஐந்து கட்டளைகள்
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பு” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1908 மணியளவில் பாராளுமன்றமானது 2018 ஏப்ரல் 3ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






