2018 மார்ச் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2018-03-21 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம், 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XII ஆம் மற்றும் XIII ஆம் பகுதிகளையும் ஆறாவது தொகுதியின் VIII, IX மற்றும் XIV ஆம் பகுதிகளையும், பத்தாவது தொகுதியின் VI ஆம் பகுதி
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை போக்குவரத்துச் சபையின் ஆண்டறிக்கை
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனத்தின் நிதிக் கூற்றுக்கள்
(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய நீரியல்வள ஆராய்ச்சி அபிவிருத்தி முகவராண்மையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கு
(iv) 2016 ஆம் ஆண்டின் வளிமண்டலவியல் திணைக்களத்தின் வருடாந்த செயற்றிறன் அறிக்கை
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
(i) அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் ஐந்தாவது அறிக்கை (2017.03.01 முதல் 2017.06.30 வரையிலான) அக்குழுவின் தவிசாளர் கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
கொழும்பு மாவட்டத்தில் செயற்படுத்தப்படுகின்ற ‘எமரிகன் வோடர்’ (American water) கருத்திட்டம்
மேற்சொன்ன வினாவிற்கு நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கௌரவ ரஊப் ஹகீம் மற்றும் பாராளுமன்றச் சபை முதல்வர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல ஆகியோர் பதிலளித்தனர்.
கௌரவ அநுர திசாநாயக்க
விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கான தலைவரை நியமித்தல்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 மற்றும் 3ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் பிரேரிக்கப்பட்டன:-
(i) கொழும்பு பங்குத் தொகுதிப் பரிவர்த்தனையை பரஸ்பரமற்றமயமாக்கல் சட்டமூலம் - விவாதிக்கப்பட்டதுடன் எதிர்வரும் தினமொன்றிற்காக ஒத்திவைக்கப்பட்டது
(ii) வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் - அங்கீகரிக்கப்பட்டது
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“முப்படையினருக்கான உணவு வழங்கல் தொடர்பான கேள்விப்பத்திரம்” பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ புத்திக பத்திறண அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1750 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 22ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






