இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 மார்ச் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-03-20

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  “தீவிரப் பொறுப்பு முகாமை” எனும் சட்டமூலம் சம்பந்தமான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு
‘B’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘C’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் -

•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்; மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமையதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XII ஆம் மற்றும் XIII பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் V ஆம் பகுதி


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான ரணவிரு சேவை அதிகாரசபையின் ஆண்டறிக்கை
(ii)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டு அறிக்கை
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஆண்டு அறிக்கை

(iv)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 8, 14 மற்றும் 30 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகன கட்டண ஒழுங்குவிதிகள் தொடர்பில்  போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 15 ஆம் திகதிய 2054/6 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(v)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 143 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகன (கடுகதிப் பாதை)ஒழுங்குவிதிகள் தொடர்பில்  போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 15 ஆம் திகதிய 2054/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(vi)    (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 215 அ பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் உடனடியான குற்றப்பணத்தொகை  ஒழுங்குவிதிகள் தொடர்பில்  போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2018 சனவரி 15 ஆம் திகதிய 2054/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(vii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 32 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின்  25 ஆம் பிரிவின் கீழ் வருடாந்த  மதுபான உரிமக் கட்டணம் தொடர்பில்  நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2017 திசெம்பர் 11 ஆம் திகதிய 2049/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(மதுவரி அறிவித்தல் இலக்கம் 1004)

(viii)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை மற்றும் கலாசார பீடத்தில் தத்துவவியல் மற்றும் விழுமியக் கற்கைகள் துறையைத் தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர்  01 ஆம் திகதிய  1995/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(ix)    1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின்  கீழ்    பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,  ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மானிடவியல்கள் மற்றும் சமூக விஞ்ஞானங்கள் பீடத்தில் தத்துவம்  மற்றும் உளவியல் துறை மற்றும் பிரயோக விஞ்ஞானங்கள் பீடத்தில் விளையாட்டு விஞ்ஞானத் துறையைத் தாபித்தல் தொடர்பாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 15 ஆம் திகதிய  2045/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(x)    2008 ஆம் ஆண்டின்  14 ஆம் இலக்க, செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டங்கள் சட்டத்தின் 3 (4)  ஆம் பிரிவின் கீழ் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2014 யூன் 16 ஆம் திகதிய 1867/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்  பிரசுரிக்கப்பட்ட கட்டளையைத் திருத்தி 2017 திசெம்பர் 29 ஆம் திகதிய 2051/38 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில்   பிரசுரிக்கப்பட்ட கட்டளை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ முஹமட் நவவி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ அசோக் அபேசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே                    
(ii)    கௌரவ லக்கி ஜயவர்தன

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யுத்த காலத்தின்போது செயற்பட்ட முன்னாள் இயக்க உறுப்பினர்களுக்கான நஷ்டஈடு

மேற்சொன்ன வினாவிற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் கௌரவ டி.எம். சுவாமிநாதன் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    நம்பிக்கைப் பொறுப்புக்கள் (திருத்தச்) சட்டமூலம் - திருத்தங்களுடன்
(ii)    நீதித்துறைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iii)    சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(iv)    இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முல்லைத்தீவு மாவட்டத்தில் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இ. சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1841 மணியளவில் பாராளுமன்றமானது 2018 மார்ச் 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom