இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2018 பெப்ரவரி 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2018-02-20

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்-

•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின்  ஆறாவது தொகுதியின் XXV ஆம் பகுதியையும்;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் நான்காவது தொகுதியின் XI ஆம் பகுதியையும் ஐந்தாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் XVI மற்றும் XVII ஆம் பகுதிகளையும் எட்டாவது தொகுதியின் IV மற்றும் V ஆம் பகுதிகளையும்;  மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VIII, IX, X மற்றும் XI ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும் நான்காவது தொகுதியின் II மற்றும் III ஆம் பகுதிகளையும் ஐந்தாவது தொகுதியின் I,II, III, IV, V மற்றும் VI ஆம் பகுதிகளையும் ஆறாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும் எட்டாவது தொகுதியின் II ஆம் பகுதியையும் பத்தாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகளையும்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கிழக்கு பல்கலைக்கழகம்
(ii)    2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில  பட்டப்பின்படிப்பு நிறுவகம்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை உயர் தொழில்நுட்பவியல் கல்வி நிறுவகம்
(iv)    2013 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை திரிபோஷ கம்பனி
(v)    2012/2013 ஆம் ஆண்டுக்கான மாந்தை உப்பு லிமிற்றெட்
(vi)    2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான  தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம்
(vii)    2015 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட கந்தளாய் சீனிக் கைத்தொழிற்சாலை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(viii)    2016 ஆம் ஆண்டுக்கான வர்த்தகத் திணைக்களத்தின் செயல்நிறைவேற்று அறிக்கையும் வருடாந்த கணக்குகளும்

(ix)    (276 ஆம் அத்தியாயமான) சட்டக் கல்விப் பேரவைக் கட்டளைச் சட்டத்தின் 7 ஆம் பிரிவின் கீழ், நீதி அமைச்சரின் ஒருப்பாட்டுடன்  கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையினால்  ஆக்கப்பட்டு, 2017 நவெம்பர் 28 ஆம் திகதிய 2047/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x)    1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, நீதித்துறைச் சட்டத்தின் 60 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும்  61 பிரிவின் கீழ், பிரதம நீதியரரின் ஒருப்பாட்டுடன் நீதியமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 திசெம்பர் 21 ஆம் திகதிய 2050/34 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ ஏ. எச். எம். பெளஸி    
(ii)    கௌரவ மனுஷ நாணாயக்கார     
(iii)    கௌரவ காமினி லொக்குகே                -                    இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ டலஸ் அழகப்பெரும 

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அதனையடுத்து, 1338 மணியளவில் பாராளுமன்றமானது 2018 பெப்ரவரி 21ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom