இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-23

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 41ஆ (6) உறுப்புரையின் பிரகாரம், 2017 ஆம் ஆண்டின் இரண்டாம் (2017.04.01 - 2017.06.30) காலாண்டுக்கான தேர்தல் ஆணைக்குழுவின் செயலாற்றுகை அறிக்கை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ பாலித குமார தெவரப்பெரும                  -            ஐந்து மனுக்கள்
(ii)    கௌரவ நிஹால் கலப்பத்தி                    
(iii)    கௌரவ எஸ்.எம். மரிக்கார் 

(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


சிறப்புரிமைக் கேள்விகள்

கௌரவ ரொசான் ரணசிங்க

அவரது அலுவலகம் மீதான தாக்குதல் மற்றும் உயிர் ஆபத்து தொடர்பானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(i)    ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பன்னிரண்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(ii)    சுகததாச தேசிய விளையாட்டுப் பல்தொகுதி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்கறிக்கை - 2012 (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

சபையால் அங்கீகரிக்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மீனவர்களைக் காப்பாற்றுவதற்காக மீனவச் (வெளிநாட்டு மீன்பிடி படகுகள் கட்டுப்பாடு) சட்டத்தை திருத்தம் செய்தல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1954 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 24ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom