இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-21

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  மத்திய வங்கியின் பிணை முறிகள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சில பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறல்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

•    2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXIV ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் X ஆம் பகுதியையும்;
•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XXVI ஆம் பகுதியையும் இரண்டாவது தொகுதியின் XXI ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் V ஆம் பகுதியையும்; மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் VI மற்றும் VII ஆம் பகுதிகளையும்,  இரண்டாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2016 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி செயலகம்
(ii)   2016 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

ஆகியவற்றின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

கல்வி மற்றும் மனித வள அபிவிருத்தி பற்றிய துறைசார்  மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ வடிவேல் சுரேஷ் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா                    
(ii)    கௌரவ வஜிர அபேவர்தன                       -       ஐந்து மனுக்கள்
(iii)    கௌரவ சந்திம வீரக்கொடி                       -       இரண்டு மனுக்கள்
(iv)    கௌரவ லஸந்த அலகியவன்ன               -       இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ ஹர்ஷண ராஜகருணா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ டக்ளஸ் தேவானந்தா

அம்பாறை மாவட்டத்திலுள்ள 5 விவசாயக் கண்டங்களில் வாழும் ஏறக்குறைய 717 குடும்பங்களுக்கு எவ்வித தடையுமின்றி தொடர்ந்து நெற் பயிர்செய்கையில் ஈடுபடக்கூடிய வாய்ப்பை ஏற்படுத்தல்

மேற்சொன்ன வினாவிற்கு கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க, இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலைய (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட பத்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1927 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 22ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2018]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom