இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 நவம்பர் 18ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-11-18

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    (235 ஆம் அத்தியாயமான) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பான தீர்மானம் (2017  ஆகஸ்ட் 11  ஆம் திகதிய 2031/49 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை)

(ii)    2014 ஆம் ஆண்டுக்கான தென்னை ஆராய்ச்சி நிலையம்
(iii)    2015 ஆம் ஆண்டுக்கான தேசிய பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவகம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iv)    2016 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் வருடாந்த செயற் திறன் அறிக்கை


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2018) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2018) ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை தேசிய மனித வள அபிவிருத்தி ஆணைக்குழுவின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2014
(ii)    தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2013
(iii)    தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும் - 2014
(iv)    தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் ஒருங்கிணைந்த நிதிக் கூற்றுக்கள் - 2013


அதனையடுத்து, 1850 மணியளவில் பாராளுமன்றமானது 2017 நவம்பர் 20ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom