2017 நவம்பர் 15ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-15 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழுவின் கூட்டம்
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
வடமாகாணத்தில் மலேரியா நுளம்புகளின் இனப்பெருக்கம் தொடர்பானது
மேற்சொன்ன வினாவிற்கு சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ பிரதி அமைச்சர் கௌரவ பைஸால் காசிம் அவர்கள் பதிலளித்தார்.
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
செவனகல, பெல்வத்த மற்றும் ஹிங்குரான கரும்பு விவசாயிகளின் மனக்குறைகள் தொடர்பானது
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஐ.டி.யூஸுப் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்கான நஷ்டஈடு மற்றும் கூடுதல் கட்டணம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1915 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2017 நவம்பர் 16ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






