2017 நவம்பர் 14ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-11-14 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி பற்றிய உப குழுவின் அறிக்கையை, வலுச்சக்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தவிசாளர் கௌரவ சந்திம கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ மஹிந்த அமரவீர - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே
(iii) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - ஏழு மனுக்கள்
(iv) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) - இரண்டாம் மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட நான்காம் நாள் இன்றாகும்.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் இணைந்து பிரித்தானிய வெளிநாட்டு மற்றும் பொதுநலவாய அலுவலகம் கொண்டுள்ள சாதகமற்ற நிலைப்பாட்டை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
இதனையடுத்து, 1857 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2018) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2017 நவம்பர் 15ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2018]
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






