இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஒக்டோபர் 20ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-10-20

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  அரசியலமைப்பு சபையின் கூட்டங்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2015 ஆம் ஆண்டுக்கான நவீன தொழில்நுட்பவியலுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவகம்
(ii)   2014 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட சீநோர் நிறுவனம்
(iii)  2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணு சக்தி சபை
(iv)  2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v)   2016 ஆம் ஆண்டுக்கான மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயற்சாதனை அறிக்கை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ ஜே.சீ. அலவத்துவல அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.

(ii)    தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (திருமதி) பவித்திராதேவி வன்னிஆரச்சி                    
(ii)    கௌரவ புத்திக பத்திறண                                           -         ஐந்து மனுக்கள்
(iii)    கௌரவ மலித் ஜயதிலக

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் சபையில் கூற்றினை முன்வைத்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

எதிர்பாராத மற்றும் அவசர சூழ்நிலைகள் காரணமாக வட மாகாணத்திலுள்ள இரு பிரதேச சபைகளுக்கான தோ்தல்கள் பின்போடப்பட்டுள்ள அத்தகைய சபைகள் தொடர்பில் புதிய பெயர் நியமனங்களைக் கோருவதற்காகவும் தோ்தல்களை நடாத்துவதற்காகவும் ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புபட்ட அல்லது அதன் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக

“உள்ளூர் அதிகாரசபைகள் (விசேட ஏற்பாடுகள்)”

எனும் சட்டமூலத்தினை அரசாங்கக் கட்சி முதற்கோலாசான் கௌரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ பந்துல லால் பண்டாரிகொட அவர்களுக்கு “ஹேஷா சிநேகபூர்வ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல், நலன்புரி மற்றும் கண்டி மரபுரிமைகள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


அதனையடுத்து, 1607 மணியளவில் பாராளுமன்றம் 2017 நவம்பர் 07ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom