2017 ஒக்டோபர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-10-19 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : “மாகாண சபை தேர்தல்கள் (திருத்தச்)” சட்டமூலம் தொடர்பானது
‘B’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம்
(ii) 2016 ஆம் ஆண்டுக்கான விலைமதிப்புத் திணைக்களம்
(iii) 2016 ஆம் ஆண்டுக்கான கண்டி மாவட்டச் செயலகம்
(iv) 2016 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
(v) 2016 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம்
(vii) 2012 ஆம் ஆண்டுக்கான இலங்கை முதலீட்டுச் சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் நான்காவது அறிக்கை (2016.09.01 முதல் 2017.02.28 வரையிலான) அக்குழுவின் தவிசாளர் கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ டபிள்யூ. டீ. ஜே. செனெவிரத்ன
(ii) கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன
இலங்கை மருத்துவ சங்கத்தின் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்ட சைட்டம் (SAITM) நிறுவனத்திற்கு தீர்வொன்றை பெற்றுக் கொடுத்தல்
மேற்சொன்ன வினாவிற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
கெளரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்களுக்கு “இலங்கை தரீக்கத்துல் அரூஸிய்யத்தில் காதிரிய்யாஹ் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் எதிர்காலத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளவைகள்” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1954 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஒக்டோபர் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






