2017 ஒக்டோபர் 17ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-10-17 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஆறாவது தொகுதியின் XXII, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும்;
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் XV, XVI, XVII, XVIII, XIX, XX, XXI, XXII, XXIII மற்றும் XXIV ஆம் பகுதிகளையும், நான்காவது தொகுதியின் VIII, IX மற்றும் X ஆம் பகுதிகளையும், ஐந்தாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் ஆறாவது தொகுதியின் III, IV, V, VI, VII, VIII, IX, X, XI மற்றும் XII ஆம் பகுதிகளையும்; மற்றும்
• 2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகளையும் நான்காவது தொகுதியின் I ஆம் பகுதியையும்
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2016 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2017.08.01 முதல் 2017.08.31 ஆம் திகதி வரையுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் குறைநிரப்பு உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் தொடர்பான குறிப்பு
(ii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25(அ) பிரிவின் கீழ் ஸ்ரீலங்கா இன்சிடியூட் ஒப் நனோடெக்னொலஜி (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவகத்தை பட்டம் வழங்கும் நிறுவனமொன்றாக ஏற்று அங்கீகரித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஓகத்து 16 ஆம் திகதிய 2032/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iii) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 20(4) (ஆ) ஆம் பிரிவின் கீழ் தொல்பொருளியல் பட்டப்பின் படிப்பு நிறுவகத்தின் பணிப்பாளருக்குப் பதிலாக தகுதிவாய்ந்த அதிகாரியொருவரை நியமித்து உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஓகத்து 18 ஆம் திகதிய 2032/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(v) 2015 ஆம் ஆண்டுக்கான மொறட்டுவப் பல்கலைக்கழகம்
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்
(vii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகம் (முகாமைத்துவம்/ கணக்கீடு)
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(viii) 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் அணு, இரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களின் பரம்புதல் தொடர்பான தடைவிதிப்புகள் தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2039/31 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(ix) 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க, ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் சனநாயகக் கொரிய மக்கள் குடியரசு தொடர்பான தடைவிதிப்புகள் தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 ஒக்டோபர் 06 ஆம் திகதிய 2039/32 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(x) 1971 ஆம் ஆண்டின் 52 ஆம் இலக்க, வணிகக் கப்பற்றொழில் சட்டத்தின் 126 மற்றும் 321 ஆம் பிரிவுகளின் கீழ், கடலோடிகளுக்கான பயிற்சியளித்தல், சான்றளித்தல், காவல் காத்தலில் ஈடுபடல் நியமங்கள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 மே 08 ஆம் திகதிய 2018/3 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மூலம் திருத்தப்பட்ட 2016 ஒக்டோபர் 04 ஆம் திகதிய 1987/19 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - நான்கு மனுக்கள்
(ii) கௌரவ லக்கி ஜயவர்தன - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ நிஹால் கலப்பத்தி
(iv) கௌரவ கே.கே. பியதாஸ
(v) கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் கைதுகள்
(ii) கௌரவ அநுர திசாநாயக்க
சைட்டம் (SAITM) நிறுவனம் தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் தன்மை
மேற்சொன்ன வினாவிற்கு உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கௌரவ மொஹான் லால் கிரேரு அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-
(i) இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்கள் (திருத்தச்) சட்டமூலம்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மதிப்பீடுகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட அமைச்சுக்களின் செலவுத் தலைப்புக்கள் பற்றிக் கலந்துரையாடுவதற்கான பாராளுமன்றத் தெரிகுழு
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள நபர்கள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ராஜவரோதயம் சம்பந்தன் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1842 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஒக்டோபர் 19ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






