இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஒக்டோபர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-10-09

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவொன்றின் பிரதி கிடைக்கப் பெறல்    
‘C’ :  “மாகாண சபை தேர்தல்கள் (திருத்தம்) சட்டமூலம்” நிறைவேற்றப்பட்ட வழிமுறை தொடர்பான ஊடக அறிக்கைகள்


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─

•    2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XX ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் VII ஆம் பகுதியையும் எட்டாவது தொகுதியின் III ஆம்  பகுதியையும் ஒன்பதாவது தொகுதியின் IV ஆம் பகுதியையும்; மற்றும்
•    2016 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் I ஆம் பகுதியையும் மூன்றாவது தொகுதியின் I ஆம் பகுதியையும்

சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    (203  ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின்  5 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவு மற்றும் 19 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ், போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 செப்தெம்பர் 22  ஆம் திகதிய 2037/23 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமான பத்திரிகையின் மூலம் திருத்தப்பட்டு 2017 செப்தெம்பர் 08  ஆம் திகதிய 2035/51 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டதுமான ஒழுங்குவிதிகள்

(ii)    மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயமான) 12, 14 மற்றும் 22 ஆம் பிரிவுகளுடன் சேர்த்து வாசிக்கப்படும் 32 ஆம் பிரிவின் கீழ்,  மதுவரி தொடர்பாக நிதி மற்றும் வெகுசன ஊடக  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 யூலை 28 ஆம் திகதிய 2029/51ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல் (மது அறிவித்தல் இலக்கம் 996)

(iii)    2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
(iv)    2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம்
(v)    2015 ஆம் ஆண்டுக்கான தென்னைப் பயிர்ச்செய்கைச் சபை

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(vi)    2016 ஆம் ஆண்டுக்கான இலங்கைச் சுங்கம்
(vii)   2015 ஆம் ஆண்டுக்கான ஆயுர்வேத திணைக்களம்
(viii)  2016 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சு

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ நிரோஷன் பெரேரா                    
(ii)    கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே                        -            ஆறு மனுக்கள்
(iii)    கௌரவ புத்திக பத்திறண                               -            நான்கு மனுக்கள்
(iv)    கௌரவ நாலக்க பிரசாத் கொலொன்னே                    
(v)    கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ             -            ஏழு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ தினேஷ் குணவர்தன

எரிபொருள் விலை அதிகரிப்புச் சாத்தியம் பற்றிய பத்திரிகைச் செய்தி

மேற்சொன்ன வினாவிற்கு பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ அர்ஜுன ரணதுங்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2018 ஆம் நிதியாண்டின் சேவைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்தகைய சேவையின் நோக்கத்திற்காக இலங்கையிலோ அல்லது இலங்கைக்கு வெளியிலோ கடன்களைத் திரட்டுவதற்கு அதிகாரமளிப்பதற்கும்; அந்நிதியாண்டின்போது அரசாங்கத்தின் குறித்த சில செயற்பாடுகள் தொடர்பில் நிதி ஏற்பாடுகளைச் செய்வதற்கும்; அத்தகைய செயற்பாடுகளுக்கான செலவினத்திற்கு அந்நிதியாண்டின்போது தேவைப்படும் பணங்களைத் திரட்டு நிதியத்திலிருந்து அல்லது அரசாங்கத்திற்குக் கிடைக்கக்கூடியதாகவுள்ள அல்லது அதனிடமுள்ள வேறேதேனும் நிதியத்திலிருந்து அல்லது பணங்களிலிருந்து முற்பணமாகக் கொடுப்பதை இயலச் செய்வதற்கும்; திரட்டு நிதியத்திற்கு அத்தகைய பணங்களை மீளளிப்பதற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடுசெய்வதற்காக

“ஒதுக்கீடு”

எனும் சட்டமூலத்தை கௌரவ பதில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ தினேஸ் குணவர்தன அவர்களுக்கு “ஸ்ரீ சாக்கியசிங்காராம விகாரஸ்த கார்யசாதக சங்விதான (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 4ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-

(i)    மாநகர சபைகள் (திருத்தம்)
(ii)    நகர சபைகள் (திருத்தம்)
(iii)    பிரதேச சபைகள் (திருத்தம்)
(iv)    காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தம்)


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மத்தள ராஜபகஷ சர்வதேச விமான நிலையத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ டலஸ் அழகப்பெரும அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1703 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஒக்டோபர் 17ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom