இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 செப்டெம்பர் 26ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-09-26

கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
‘B’ :  2017 ஒக்டோபர் 3ஆம் திகதிய விசேட பாராளுமன்ற அமர்வையொட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்
‘C’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ சமல் ராஜபக்ஷ அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ எட்வட் குணசேகர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(iii)    தேசியப் பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ மலித் ஜயதிலக அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி         -          இரண்டு மனுக்கள்
(ii)    கௌரவ எட்வட் குணசேகர  
(iii)    கௌரவ புத்திக பத்திறண                  -          மூன்று மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i)    கௌரவ தினேஷ் குணவர்தன

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அடக்குமுறை தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பதிலளித்தார்.

(ii)    கௌரவ அநுர திசாநாயக்க

கிழக்கு மாகாணத்தில் சேவை புரியும் பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பானது

மேற்சொன்ன வினாவிற்கு சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் கௌரவ சாகல ரத்நாயக்க அவர்கள் பதிலளித்தார்.


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

கௌரவ மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்-

(i)    மாநகர சபைகள் (திருத்தம்) - (252 ஆம் அத்தியாயமான) மாநகர சபைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(ii)    நகர சபைகள் (திருத்தம்) - (255 ஆம் அத்தியாயமான) நகர சபைகள் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானது
(iii)    பிரதேச சபைகள் (திருத்தம்) - 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க, பிரதேச சபைகள் சட்டத்தைத் திருத்துவதற்கானது


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் கட்டளை
(ii)    மீள ஒப்படைத்தல் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்


அதனையடுத்து, 1755 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஒக்டோபர் 03ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1430 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom