2017 மார்ச் 21ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-03-21 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம்─
• 2012 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் ஐந்தாவது தொகுதியின் IX ஆம் பகுதியையும் எட்டாவது தொகுதியின் VI ஆம் பகுதியையும்;
• 2013 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XXI மற்றும் XXII ஆம் பகுதிகளையும் மூன்றாம் தொகுதியின் VII பகுதியையும் ஆறாம் தொகுதியின் VI, VII, VIII, IX, X மற்றும் XV ஆம் பகுதிகளையும் ;
• 2014 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் இரண்டாவது தொகுதியின் XVIII மற்றும் XIX ஆம் பகுதிகளையும் ஐந்தாவது தொகுதியின் VII மற்றும் VIII ஆம் பகுதிகளையும்;
• 2015 ஆம் நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையின் முதலாவது தொகுதியின் I, II மற்றும் III ஆம் பகுதிகளையும் இரண்டாவது தொகுதியின் II, III, IV மற்றும் V ஆம் பகுதிகளையும் மூன்றாவது தொகுதியின் I மற்றும் II ஆம் பகுதிகள் மற்றும் நான்காவது தொகுதியின் III, IV மற்றும் V ஆம் பகுதிகளையும்;
சமர்ப்பித்ததுடன், இவ்வறிக்கைகளை அச்சிடுவதற்கு பாராளுமன்றம் அனுமதியளித்தது.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
நிலைபெறுதகு அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட ஐக்கிய நாடுகளின் 2030 - நிகழ்ச்சிநிரல் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வூட்டும் அமர்வு
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியச் சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய வடிவமைப்பு நிலையம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான கமத்தொழில் மற்றும் கமநலக் காப்புறுதிச் சபை
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான நீர் வளச் சபை
(vii) 2014 ஆம் ஆண்டுக்கான குருணாகல் ப்ளான்டேஷன் லிமிற்றற்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழு
(ix) 2014 ஆம் ஆண்டுக்கான கமநல அபிவிருத்தித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(x) 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் 34 (1) ஆம் பிரிவின் கீழ், தடைசெய்யப்பட்ட பொருட்களின் பட்டியல் (2017) தொடர்பில், விளையாட்டுத்துறை அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2017 பெப்புருவரி 14 ஆம் திகதிய 2006/15 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்
அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கெளரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ஜோன் அமரதுங்க
(ii) கௌரவ லக்ஷமன் கிரிஎல்ல - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ சுஜீவ சேனசிங்க - மூன்று மனுக்கள்
(iv) கௌரவ அசோக் அபேசிங்க - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ ஜே.சீ. அலவத்துவல - மூன்று மனுக்கள்
(vi) கௌரவ விதுற விக்கிரமநாயக்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
(i) கௌரவ தினேஷ் குணவர்தன
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானம்
(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா
நாட்டில் வேகமாக பரவிவரும் டெங்கு உயிர்கொல்லி நோயினை கட்டுப்படுத்தல் தொடர்பானது
(iii) கௌரவ அநுர திசாநாயக்க
இலங்கை மற்றும் ஐக்கிய அமெரிக்கா இற்கிடையிலான பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி முறி சிக்கல்கள் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பாக 2017.03.07 அன்று பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள் எழுப்பிய வினாவிற்கு பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பதிலளித்தார்.
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க, காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) சட்டத்தைத் திருத்தவதற்காக
“காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிர்வகித்தலும், பணிகளை நிறைவேற்றுதலும்) (திருத்தம்)”
எனும் சட்டமூலத்தினை உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ லக்ஷ்மன் கிரிஎல்ல அவர்கள் பிரேரித்தார்.
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ அனுர சிட்னி ஜயரத்ன அவர்களுக்கு “ஹெக்டர் அப்புஹாமி ஹெல்பிங் ஹேண்ட் அறக்கட்டளை மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்களுக்கு “குளோபல் ஹியுமெனிடேரியன் பவுன்டேஷன் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
(iii) கெளரவ (டாக்டர்) (திருமதி) துஸிதா விஜேமான்ன அவர்களுக்கு “அகில இலங்கை வரலாற்று ரீதியான தேவாலய அலுவலர்களின் சங்க (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் புத்தசாசன அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
ஒத்திவைப்புப் பிரேரணை
“நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ தினேஷ் குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1900 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 22ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






