இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 பெப்ரவரி 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-02-07

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ :  மும்மொழிகளிலும் PEO TV இல் சபை நடவடிக்கை முறையின் நேரடி ஒளிபரப்பு

‘B’ :  கௌரவ கே. காதர் மஸ்தான், பா.உ. அவர்கள்
‘C’ :  கௌரவ குமார வெல்கம, பா.உ. அவர்கள்
ஆகியோரது சிறப்புரிமைகள் மீறப்பட்டதாக கேள்விகள் எழுப்பிய விடயங்கள்

‘D’ :  நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைவு தொடர்பாக கலந்துரையாடுவதற்கான இரண்டாவது விசேட கூட்டம்
‘E’ :  பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 20122013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான  நிருவாக மேன்முறையீடுகள் நியாய சபை
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய ஆராய்ச்சி மன்றம்

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(iii) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய தாவரவியல் பூங்காக்கள் திணைக்களத்தின் வருடாந்த முன்னேற்ற அறிக்கை

(iv) 2006 ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க, புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபைச் சட்டத்தின் 33 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 30 ஆம் பிரிவின் கீழ் விதித்துரைக்கப்பட்டனவான புகையிலை உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதனை அல்லது விற்பதனைத்  தடைசெய்தல்   தொடர்பில்   சுகாதாரம், போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016  செத்தெம்பர் 01 ஆம் திகதிய 1982/33 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை மற்றும் 2016 திசெம்பர் 15 ஆம் திகதிய 1997/22 ஆம் இலக்க திருத்தம்   செய்யப்பட்ட  அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்

(v) 2013 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க, குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் அச்சட்டத்தின் காலவெல்லை  தொடர்பில்   நீதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2017 சனவரி 18 ஆம் திகதிய 2002/28 ஆம் இலக்க  அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா       -  இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(iii) கௌரவ சீ. பீ. ரத்நாயக்க
(iv) கௌரவ எட்வட் குணசேகர                     -  மூன்று மனுக்கள்
(v) கௌரவ ஏ.ஏ. விஜேதுங்க
(vi) கௌரவ (வண.) அதுரலியே ரதன தேரர்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ தினேஷ் குணவர்தன

பல்கலைக்கழக மாணவர்களின் கைது மற்றும் அவர்களுக்கான அச்சுறுத்தல்கள் தொடர்பானது

(ii) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

நெடுந்தீவிலுள்ள வைத்தியசாலையில் நிலவும் சிக்கல்கள் தொடர்பானது


அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்

ஊவா மாகாண சபை முதலமைச்சரின் செயற்பாடு தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்

சபையால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“மக்களின் எதிர்ப்புக்களுக்கு நகரத்தில் தனியான இடமொன்றை ஒதுக்குதல்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ எஸ்.எம். மரிக்கார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1901 மணியளவில் பாராளுமன்றம் 2017 பெப்ரவரி 08ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom