இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2017 ஜனவரி 25ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2017-01-25

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

2016.10.28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கையானது சபையின் அனுமதியுடன் மேலதிக  நடவடிக்கைகளுக்காக சட்ட மா அதிபருக்கு ஆற்றுப்படுத்தப்படும்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2008, 2009, 2010, 2011, 2012, 2013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான இலஞ்சம் அல்லது ஊழல் பற்றி சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு
(ii) 2011 மற்றும் 2012 ஆண்டுகளுக்கான ஹோமியோபதி மருத்துவ சபை
(iii) 2014/15 ஆம் ஆண்டுக்கான வரையறுக்கப்பட்ட இலங்கை பொஸ்பேட் நிறுவனம்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை வங்கி

ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்

(v) 2015 ஆம் ஆண்டுக்கான அநுராதபுர மாவட்ட செயலகம்
(vi) 2015 ஆம் ஆண்டுக்கான உள்நாட்டு இறைவரித் திணைக்களம்

ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அரசாங்க நிதி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கையை அக்குழுவின் தவிசாளர் கௌரவ எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் சார்பாக கௌரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ அப்துல் ஹலீம்                        -         மூன்று மனுக்கள்
(ii) கௌரவ பாலித குமார தெவரப்பெரும         
(iii) கௌரவ உதய பிரபாத் கம்மன்பில
(iv) கௌரவ பியங்கர ஜயரத்ன                   
(v) கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ       -         மூன்று மனுக்கள்
(vi) கௌரவ எச்.எம்.எம். ஹரீஸ்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

ஒவ்வொரு ஆண்டும் அரச பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக் கொண்டதன் பின்னர் ஏற்படுகின்ற வெற்றிடங்களை நிரப்புவதற்காக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நேர்த்தியான நடவடிக்கைகள் தொடர்பானது


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ மயில்வாகனம் திலகராஜா அவர்களுக்கு “யுஎன்வீ மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலம் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 5 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i) ஏற்றுமதிகள் இறக்குமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(ii) சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் கீழ் கட்டளை
(iii) உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் இரு கட்டளைகள்
(iv) காணி (பாராதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளை


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“தேசிய லொத்தர் சபையினால் வெளியிடப்பட்ட லொத்தர் டிக்கட்டின் விற்பனை விலைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ பந்துல குணவர்தன அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜனவரி 26ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom