2017 ஜனவரி 24ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-01-24 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
2015 திசெம்பர் 19 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பிரேரணையின் 2 (உ) இன் பிரகாரம் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் மேற்பார்வைத் திட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2013 ஆம் ஆண்டுக்கான தேசிய போக்குவரத்து வைத்திய நிறுவகம்
(ii) 2012 ஆம் ஆண்டுக்கான சிரமவாசனா நிதியம்
(iii) 2013 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகம்
(iv) 2013 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்
(v) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை களனிப் பல்கலைக்கழகம்
(vi) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம்
(vii) 2013 ஆம் ஆண்டுக்கான பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பட்டப்பின் படிப்பு நிறுவனம்
(viii) 2013 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக, தேசிய நூலக, தகவல் விஞ்ஞான நிறுவகம்
(ix) 2013 ஆம் ஆண்டுக்கான கொழும்புப் பல்கலைக்கழக கமத்தொழில் தொழில்நுட்பவியல் மற்றும் கிராமிய விஞ்ஞானங்களுக்கான நிறுவனம்
(x) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகம்
(xi) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை கொழும்பு பல்கலைக்கழகம்
(xii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை மொரட்டுவப் பல்கலைக்கழகம்
(xiii) 2014 ஆம் ஆண்டுக்கான மொரட்டுவப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப நிறுவனம்
(xiv) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான ஸ்ரீ லங்கா கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மனிதவள மேம்பாட்டு நிறுவகம்
(xv) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான களனிப் பல்கலைக்கழகத்தின் கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம்
(xvi) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை கிழக்குப் பல்கலைக்கழத்தின் சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகம்
(xvii) 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளுக்கான றுஹுண பல்கலைக்கழகம்
(xviii) 2014 ஆம் ஆண்டுக்கான கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனம்
(xix) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவகம்
(xx) 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கி
(xxi) 2012 ஆம் ஆண்டுக்கான அரச அபிவிருத்தி நிருமாணக் கூட்டுத்தாபனம்
(xxii) 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளுக்கான புனர்வாழ்வு அதிகார சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(xxiii) 2015 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(xxiv) (460 ஆம் அத்தியாயமான) காணி எடுத்தற் சட்டத்தின் 63 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் (ஊ) என்னும் பந்தியின் கீழ் 2013 ஆம் காணி எடுத்தற் (நட்டஈடு செலுத்துதல்) ஒழுங்குவிதிகளின் 4(2) ஆம் ஒழுங்குவிதியைத் திருத்தி காணி அமைச்சரினால் ஆக்கப்பட்டு, 2016 நவம்பர் 18 ஆம் திகதிய 1993/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xxv) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25அ ஆம் பிரிவின் கீழ் “எஸ் எல் ரி கெம்பஸ் (பிரைவெட்) லிமிட்டெட் கம்பனியை” பட்டமளிக்கும் நிறுவகமாக அங்கீகரித்து உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 02 ஆம் திகதிய 1995/39 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxvi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது, இலங்கை மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் மொழிகள் துறையை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2016 நவெம்பர் 03 ஆம் திகதிய 1991/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxvii) 2015 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைச் சட்டத்தின் 118 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் 142 ஆவது பிரிவின் கீழ் சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் விலைகளின் மீதான உச்சவரம்பு தொடர்பாக ஆக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 21 ஆம் திகதிய 1989/61 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxviii) 2015 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின் கீழ் 2016.12.31 ஆம் திகதியன்றுள்ளவாறு தேசிய வரவு செலவுத்திட்டத்தின் செலவினத் தலைப்பு இலக்கம் 240 இன் கீழ் வரவு செலவுத் திட்ட உதவிச் சேவைகள் மற்றும் அவசர தேவைப்பாடுகள் பொறுப்புக் கருத்திட்டத்தின் மூலம் செய்யப்பட்ட குறைநிரப்பு ஒதுக்கீடுகள் - 2016
(xxix) மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் (52 ஆம் அத்தியாயம்) 22 (2) ஆம் பிரிவின் மூலம் மீள் ஏற்றுமதிக்காக அல்லது தீர்வையற்ற கடைகளில் வெளிநாட்டு அலகில் விற்பனை செய்வதற்காக இறக்குமதி செய்யப்படுகின்ற வெளிநாட்டு மதுபானம் மீது மதுவரியினை விலக்களிப்பது தொடர்பில் 2016 ஒற்றோபர் 04 ஆம் திகதி முதல் பயன்வலுப்பெறும் வகையில், நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 03 ஆம் திகதிய 1987/5 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட அறிவித்தல்
(xxx) 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 நவம்பர் 10 ஆம் திகதிய 1992/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxi) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (235 ஆம் அத்தியாயம்) 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதி தீர்வைகள் தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 நவம்பர் 10 ஆம் திகதிய 1992/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxxii) 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் 477 ஆம் பிரிவுடன் வாசிக்கப்படும் 527 ஆம் பிரிவின் கீழ் மற்றும் 2005 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளை (திருத்தச்) சட்டத்துடன் வாசிக்கப்படும் (123 ஆம் அத்தியாயம்) 1891 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க சங்கங்கள் கட்டளைச் சட்டத்தின் 19 ஆம் பிரிவின் கீழ், கம்பனிகள் (கட்டணம்) மற்றும் சங்கங்கள் (கட்டணம்) தொடர்பாக கைத்தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 ஒற்றோபர் 25 ஆம் திகதிய 1990/12 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ கயந்த கருணாதிலக்க
(ii) கௌரவ அசோக் அபேசிங்க
(iii) கௌரவ காமினி லொக்குகே
(iv) கௌரவ நிஹால் கலப்பத்தி
(v) கௌரவ சந்தித் சமரசிங்க
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்
(i) கெளரவ அனுர சிட்னி ஜயரத் அவர்களுக்கு “பாலித தெவரப்பெரும மன்ற (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
(ii) கெளரவ கனக ஹேரத் அவர்களுக்கு “தொழில்நுட்பத்தையும் சமூகசேவையையும் உயர்த்துவதற்கான கல்வி நிலைய (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன இரு சட்டமூலங்கள் (i) மற்றும் (ii) முறையே சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன.
ஒத்திவைப்புப் பிரேரணை
“2016.10.28 அன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அறிக்கை” தொடர்பான ஒத்திவைப்புப் பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1930 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜனவரி 25ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






