2017 ஜனவரி 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2017-01-09 |
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் எழுப்பிய சிறப்புரிமை விடயங்களை பிரேரணைகளாக சமர்ப்பித்தல்-
‘B’ : கௌரவ (கலாநிதி) ஜயம்பதி விக்ரமரத்ன
‘C’ : கௌரவ பியல் நிசாந்த த சில்வா
‘D’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
சபாநாயகர் பத்திரங்களைச் சமர்ப்பித்தல்
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(6) ஆம் உறுப்புரையின் பிரகாரம் 2015 நிதி ஆண்டிற்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் ஆண்டறிக்கை
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கைப் பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு
(ii) 2013 ஆம் ஆண்டுக்கான இலங்கை ஆயுர்வேத மருந்துப்பொருள் கூட்டுத்தாபனம்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய அருங்கலைகள் பேரவை
(iv) 2014 ஆம் ஆண்டுக்கான தலவாக்கலை இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையம்
(v) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கைத் தேயிலை சபை
(vi) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(vii) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை கடற்படை
(viii) 2015 ஆம் ஆண்டுக்கான அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம்
(ix) 2015 ஆம் ஆண்டுக்கான மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு
(x) 2008, 2009, 2010, 2011, 2012, 20013, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளுக்கான கொலன்னாவ அரசாங்கத் தொழிற்சாலை திணைக்களம்
(xi) 2015 ஆம் ஆண்டுக்கான ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்
(xii) 2015 ஆம் ஆண்டுக்கான ஆரம்பக் கைத்தொழில் அமைச்சு
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(xiii) (203 ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தின் 164 ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்படும் அச்சட்டத்தின் 237 ஆம் பிரிவின் கீழ் மோட்டார் வாகனங்கள் (சைகைகள், சமிக்ஞைகள், அடையாளங்கள் மற்றும் வீதிக் குறியீடுகள்) தொடர்பாக போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சரால் ஆக்கப்பட்டு 2015 நவம்பர் 12 ஆம் திகதிய 1940/21 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xiv) 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 2012 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க ஐக்கிய நாடுகளின் ஒழுங்கு விதிகளைத் திருத்தி வெளிவிவகார அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 நவம்பர் 04 ஆம் திகதிய 1991/52 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்
(xv) 2015 ஆம் ஆண்டு சர்வதேச தொழில் தாபனத்தினால் அதன் 104 ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 204 ஆவது விதப்புரை
(xvi) 1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ், உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவக் கல்வித்துறை கேந்திர நிலையத்தை மருத்துவக் கல்வித் துறையொன்றாக தரம் உயர்த்தி விதிக்கப்பட்டு, 2016 நவம்பர் 03 ஆம் திகதிய 1991/43 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 27(1) ஆம் பிரிவின் கீழ் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரால் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் விதப்புரையின் மீது,
(xvii) இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தில் நானோ விஞ்ஞான தொழில்நுட்பவியல் துறையை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 01 ஆம் திகதிய 1995/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xviii) இலங்கை ருகுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் உணர்வழிவியல் துறையை நிறுவுவது தொடர்பில் ஆக்கப்பட்டு, 2016 திசெம்பர் 01 ஆம் திகதிய 1995/26ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xix) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 ஒக்டோபர் 03 ஆம் திகதிய 1987/8 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xx) 1989 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க உற்பத்தி வரி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் 3 இ ஆம் பிரிவின் கீழான உற்பத்தி வரி தொடர்பில் நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 நவம்பர் 10 ஆம் திகதிய 1992/30 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxi) 2014 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க காணி (பாராதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள்) சட்டத்தின் 3(2) ஆம் பிரிவின் கீழ், நிதி அமைச்சரினால் செயல்நுணுக்க அபிவிருத்திக் கருத்திட்டம் என அடையாளம் காணப்பட்ட எம்.எஸ். அவிக் இன்டர்நெஷனல் ஹோட்டல்ஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்திற்கு இறையிலி நில உடைமை அடிப்படையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள காணி கைமாற்றல் தொடர்பில் நிதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 நவம்பர் மாதம் 08 ஆம் திகதிய 1992/10 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
(xxii) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் அரசாங்கம் மற்றும் யுக்ரேன் அரசாங்கத்திற்குமிடையே குற்றவியல் கருமங்களின் போது பரஸ்பர உதவியளித்தல் பற்றி ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கை தொடர்பாக 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் கருமங்களின் போது பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் நீதி அமைச்சரால் விதிக்கப்பட்டு, 2016 நவம்பர் 11 ஆம் திகதிய 1992/78 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ சுசந்த புஞ்சிநிலமே - இரண்டு மனுக்கள்
(ii) கௌரவ விஜித ஹேரத் - நான்கு மனுக்கள்
(iii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி
(iv) கௌரவ புத்திக பத்திறண - இரண்டு மனுக்கள்
(v) கௌரவ ஆனந்த அலுத்கமகே - இரண்டு மனுக்கள்
(vi) கௌரவ ஹேஷான் விதானகே
(vii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன அவர்கள்
பிரேரிக்கப்பட்டுள்ள ஹம்பாந்தோட்டை கைத்தொழில் வலயம் மற்றும் அதன் ஏனைய இடர்பாடுகள் தொடர்பானது
சட்டமூலங்கள் சமர்ப்பணம்
இலங்கையில் நிலைபெறுதகு அபிவிருத்தி மீதான தேசியக் கொள்கையையும் செயல்நுணுக்கத்தையும் அபிவிருத்தி செய்வதற்காகவும் அமுலாக்குவதற்காகவும்; நிலைபெறுதகு அபிவிருத்திப் பேரவையொன்றைத் தாபிப்பதற்காகவும்; அத்துடன் அவற்றோடு தொடர்புபட்ட அல்லது அவற்றின் இடைநோ்விளைவான கருமங்களுக்காகவும் ஏற்பாடு செய்வதற்காக
“இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்தி”
எனும் சட்டமூலத்தினை பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமான கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரேரித்தார்.
அதனையடுத்து, 1040 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஜனவரி 24ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






