2016 டிசம்பர் 09ஆந் திகதியின் சபை அலுவல்கள் |
திகதி : | 2016-12-09 |
கௌரவ திலங்க சுமதிபால, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2015 ஆம் ஆண்டுக்கான வனப் பாதுகாப்புத் திணைக்களம்
(ii) 2015 ஆம் ஆண்டுக்கான வாழ்வின் எழுச்சி அபிவிருத்தித் திணைக்களம்
ஆகியவற்றின் செயலாற்றுகை அறிக்கைகள்
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
கௌரவ பியல் நிசாந்த த சில்வா அவர்கள் பொது மனுவொன்றினை சமர்ப்பித்தார்.
(மனு பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ தினேஷ் குணவர்தன
‘breakingnews.lk’ இணையத்தளத்தை தடை செய்தல் தொடர்பானது
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
(i) கிறிஸ்மஸ் காலத்தின் போது அரிசின் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ அநுர திசாநாயக்க அவர்கள் எழுப்பிய வினாவிற்கு கிராமியப் பொருளாதார விவகாரங்கள் பற்றிய அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
(ii) வவுனியா மற்றும் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுகளில் இடம்பெயர்ந்தோரை மீள்குடியமர்த்துவதற்கான வசதிகள் தொடர்பாக பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழ் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எழுப்பிய வினாவிற்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் அவர்கள் பதிலளித்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2017) - குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட இருபத்திநான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“தங்கல்ல மற்றும் பெலிஅத்த இலுள்ள நமயலவில குடிநீர் கருத்திட்டம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ நிஹால் கலப்பத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1852 மணியளவில் பாராளுமன்றமானது 2016 டிசம்பர் 10ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






