இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 டிசம்பர் 08ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-12-08

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரினால் பத்திரங்கள் சமர்ப்பிக்கப்படல்

• இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41எ (1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் சனாதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புப் பேரவையின் முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது அறிக்கைகள்;

• இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம் 2016.01.01 – 2016.09.30 வரையிலான காலப்பகுதிக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை; மற்றும்

• இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும்153ஏ ஆகிய உறுப்புரைகளின் பிரகாரம் 2015.12.11 – 2016.09.30 வரையிலான காலப்பகுதிக்கான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் செயற்திறன் அறிக்கை


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2016 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்கச் சட்டத்தின் மூலம் இறுதியாக திருத்தப்பட்டவாறு, 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க சேர் பெறுமதி வரிச் சட்டத்தின் 5 (15) ஆம் பிரிவின் கீழ் மருத்துவத் தொழிலருக்கு செலுத்தப்பட்ட கட்டணம், மருத்துவ ஆலோசனைக் கட்டணம், சனலிங் கட்டணம், மருத்துவமனை அறைக் கட்டணம் நீங்கலாக ஏதேனும் சுகாதாரப் பராமரிப்புகுச் சேவைக்கான ஆகுசெலவினம், சுகாதார பராமரிப்புச் சேவை வழங்கலின் பெறுமதியின் பேரில் வரி கணிப்பீடு செய்யும் பொது விலக்களிப்புச் செய்வதற்காக நிதி அமைச்சரினால் விதிக்கப்பட்டு, 2016 நவம்பர் மாதம் 01 ஆம் திகதிய 1991/17 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட கட்டளை

(ii) 1985 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1987 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஏற்றுமதி இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் 4 ஆவது பிரிவின் 3 ஆவது உப பிரிவு மற்றும் 14 ஆவது பிரிவு என்பற்றுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய குறித்த சட்டத்தின் 20 ஆவது பிரிவின் கீழ்  அமைச்சரால் ஆக்கப்பட்டு, 2016 நவம்பர் 11 ஆம் திகதிய 1992/74 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ நிஹால் கலப்பத்தி                   
(ii) கௌரவ பிமல் ரத்நாயக்க                   
(iii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்

(i) கௌரவ டக்ளஸ் தேவானந்தா

யாழ் குடாநாட்டிலுள்ள இயற்கை அனர்த்தங்கள் தொடர்பானது

(ii) கௌரவ அநுர திசாநாயக்க

கிறிஸ்மஸ் காலத்தின் போது அரிசின் விலை உயர்வு தொடர்பானது


சட்டமூலங்கள் சமர்ப்பணம்

2013 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க, வாழ்வின் எழுச்சிச் சட்டத்தைத் திருத்துவதற்காக

“வாழ்வின் எழுச்சி (திருத்தம்)”

எனும் சட்டமூலத்தினை பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அரசாங்கக் கட்சி முதற் கோலாசானுமான கெளரவ கயந்த கருணாதிலக்க அவர்கள் பிரேரித்தார்.


தனியார் உறுப்பினர்கள் சட்டமூலங்கள்

கெளரவ (டாக்டர்) கவிந்த ஹேஷான் ஜயவர்தன அவர்களுக்கு “ஹேன்ட் டு ஸ்டான்ட் பவுண்டேஷன் (கூட்டிணைத்தல்)” சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

நிலையியற் கட்டளை 47(5) இன் கீழ் பாராளுமன்றத்திற்கு அறிக்கை செய்வதற்கு மேற்சொன்ன சட்டமூலங்கள் சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சருக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“உமா ஒய அபிவிருத்தி கருத்திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சமிந்த விஜேசிறி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1918 மணியளவில் பாராளுமன்றமானது 2016 டிசம்பர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom