இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

2016 டிசம்பர் 03ஆந் திகதியின் சபை அலுவல்கள்

திகதி : 2016-12-03

கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் 3 ஆம் உப பிரிவின் கீழ் விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பில் நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(i) 2016 யூன் 30 ஆம் திகதிய 1973/61 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(ii) 2016 யூலை 18 ஆம் திகதிய 1976/4 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iii) 2016 ஆகஸ்ட் 19 ஆம் திகதிய 1980/37 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(iv) 2016 ஆகஸட் 24 ஆம் திகதிய 1981/46 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(v) 2016 செப்தெம்பர் 07 ஆம் திகதிய 1983/13 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vi) 2016 செப்தெம்பர் 15 ஆம் திகதிய 1984/26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(vii) 2016 செப்தெம்பர் 29 ஆம் திகதிய 1986/55 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(viii) 2016 செப்தெம்பர் 30 ஆம் திகதிய 1986/66 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(ix)  2016 நவம்பர் 07 ஆம் திகதிய 1992/9 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 235) 10 ஆம் பிரிவின் கீழ் இறக்குமதித் தீர்வைக் கட்டணங்கள் தொடர்பில்  நிதி அமைச்சரால் ஆக்கப்பட்ட கட்டளைகள்;

(x) 2016 ஆகஸ்ட் 12 ஆம் திகதிய 1979/45 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xi) 2016 ஆகஸ்ட் 24 ஆம் திகதிய 1981/44 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை
(xii)  2016 செப்தெம்பர் 14 ஆம் திகதிய 1984/25 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகை


மனுக்களைச் சமர்ப்பித்தல்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினரினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-

(i) கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க         - மூன்று மனுக்கள்
(ii) கௌரவ காமினி லொக்குகே                  - இரண்டு மனுக்கள்

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2017) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2017) ஒதுக்கப்பட்ட பத்தொன்பதாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“முச்சக்கர வண்டி மற்றும் வாடகை பேரூந்து சாரதிகளுக்கான முன் அடையாளம் காணல் செயல்முறைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ (பேராசிரியர்) ஆசு மாரசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1904 மணியளவில் பாராளுமன்றமானது 2016 டிசம்பர் 05ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2017]

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom